விக்னேஷ் சிவன் படம் இல்லை.. காதலர் தினத்துக்கு பிரதீப் ரங்கநாதனோட இந்த படம் தான் முதல்ல வருதாம்!

சென்னை: லவ் டுடே படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அந்த படம் ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. லவ் இன்சூரன்ஸ் கம்பேனி என்கிற டைட்டிலை விக்னேஷ் சிவன் வைத்த நிலையில், LIC என சுருக்கமாக குறிப்பிட்டு போஸ்டர்கள் வெளியாகின.

ஆனால், LIC நிறுவனம் அந்த தலைப்பை வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், Love Insurace Kompany என மாற்றி LIK என்கிற டைட்டிலை விக்னேஷ் சிவன் மாற்றினார்.

pradeep ranganathan vignesh shivan dragon

அதன் பிறகு கூட அந்த படம் இன்னமும் படப்பிடிப்பே முடியாமல் இழுத்தடித்துக் கொண்டே போகும் நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகவுள்ள 2வது படமாக டிராகன் படம் தான் இருக்கும் என இன்று நடைபெற்ற விழா ஒன்றில் பிரதீப் ரங்கநாதன் வெளிப்படையாக அப்டேட் கொடுத்துள்ளார்.

இயக்குநராக டபுள் ஹிட்: ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, ஆர்ஜே ஆனந்தி, சம்யுக்தா ஹெக்டே, ஷாரா, பிக் பாஸ் வருண் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அடுத்ததாக அவரே இயக்கி ஹீரோவாகவும் அறிமுகமான லவ் டுடே திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்: ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவன் இழந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை விக்னேஷ் சிவன் ஆரம்பித்தார். எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் சீமான் நடித்து வரும் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடியவில்லை என்றும் நடைபெற்று வருகிறது என இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

காதலர் தின பரிசு: ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்க ஆரம்பித்த டிராகன் திரைப்படம் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் பிப்ரவரி மாதம் காதலர் தினக் கொண்டாட்டமாக வெளியாகப் போவதாகவும் பிரதீப் ரங்கநாதன் அறிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் படம் முதலில் வரவில்லை என்றும் டிராகன் படம் முந்திக் கொண்டு வெளியாகிறது என்பதும் அவரது பேச்சின் மூலம் உறுதியாகியுள்ளது.

அடுத்த படம் யாருடன்: டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் என 2 மலையாள நடிகைகள் நடித்து வருகின்றனர். அந்த படத்தை முடித்து விட்டு அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகிறாராம். வரும் ஜனவரி மாதம் அந்த படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X