மீண்டும் இணையும் லவ் டுடே கூட்டணி... விக்னேஷ் சிவனை டீலில் விட்ட பிரதீப்... இதுவும் போச்சா!
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
பிரதீப் ரங்கநாதனின் மேக்கிங், யுவனின் இசை, அழகுப் பதுமை இவானா என எல்லாவற்றையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
12 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸிலும் புதிய சாதனை படைத்தது.
இந்நிலையில், லவ் டுடே கூட்டணி மீண்டும் இணையுள்ளதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

கன்னுக்குட்டி - மாமா குட்டி
2022ம் ஆண்டு தமிழில் வெளியான சில பெரிய பட்ஜெட் படங்களே வசூலில் தடுமாறின. ஆனால், 15 கோடியில் உருவான லவ் டுடே கோலிவுட் பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்தது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்த இந்த படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களும் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்தன.

மீண்டும் இணையும் மேஜிக் காம்போ
கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடேவில் ஹீரோவாகவும் அசத்தியிருந்தார். பிரதீப் - இவானா கெமிஸ்ட்ரி ஸ்க்ரீனில் சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது. யுவனும் செம்ம மாஸ்ஸாக கம்பேக் கொடுத்தார். பிரதீப் - இவானா - யுவன் என மேஜிக் காம்போவாக உருவான இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வெயிட்டிங்கில் விக்னேஷ் சிவன்
கோமாளி, லவ் டுடே என பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் பங்கம் செய்தது. இதனால், பிரதீப் ரங்கநாதனை தேடி ஏராளமான பட வாய்ப்புகள் சென்றுள்ளதாம். ஸ்டூடியோ க்ரீன் லைகா போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக நடிக்க வைத்து தனது அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டிருந்தாராம் விக்னேஷ் சிவன்.

டீலில் விடும் பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோ, டைரக்டர் என இரண்டு பக்கமும் வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால் ஏகே 62 படத்தை மிஸ் செய்த விக்கி, விஜய் சேதுபதி, பிரதீப் ரங்கநாதன், நயன் காம்போவில் ஒரு படம் இயக்க ப்ளான் செய்திருந்தாராம். ஆனால், ஏற்கனவே ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்துவிட்ட பிரதீப், முதலில் தனது படத்தை முடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

விரைவில் அபிஸியல் அப்டேட்
அதனால், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடிப்பது சந்தேகமே என சொல்லப்படுகிறது. மேலும், பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ள படத்தில், அவரே ஹீரோவாக நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு ஜோடியாக இவானா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக யுவன் இசையில் மீண்டும் இணைகிறதாம் லவ் டுடே காம்போ. இந்தப் படமும் லவ் டுடே போன்று 2கே கிட்ஸ் ஃபேவரைட் ஜானராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் முடிவால் இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்னும் குழப்பத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











