Dragon vs NEEK BO: தனுஷ் படத்தை விட 10 மடங்கு வசூல் அதிகம்.. NEEKகை வீக்காக்கிய ’டிராகன்’ வசூல்!

சென்னை: ரஜினிகாந்த் மேனரிசத்தை எல்லாம் திரையில் செய்து தனுஷ் ஹீரோவாக மாறினார். ரஜினிகாந்தின் படங்களின் பெயரை எல்லாம் தனது படங்களுக்கு மாப்பிள்ளை, பொல்லாதவன் என வைத்துக் கொண்டு வெற்றி வாகை சூடினார். இந்நிலையில், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம் படங்களில் தனுஷை பார்த்ததை போலவே அச்சு பிசகாமல் அப்படியே இன்னொரு ஜெராக்ஸாக வந்துள்ள பிரதீப் ரங்கநாதன் சிகரெட் பிடிப்பதில் ரஜினிகாந்த் போல ஸ்டைல் செய்து டிராகன் படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கியுள்ளார்.

லவ் டுடே படம் ஏதோ கதைக்காக ஓடியது. இல்லையென்றால் இந்த மூஞ்சையெல்லாம் ரசிகர்கள் தியேட்டருக்குப் போய் காசு கொடுத்து பார்க்க மாட்டார்கள் என ஏகப்பட்ட கிண்டல்களையும் கேலிகளையும் சகித்துக் கொண்டு கதையை தாண்டி தனது ஆக்டிங்கை பாராட்ட வைக்கும் அளவுக்கு பிரதீப் ரங்கநாதன் மொத்த உடலையும் நடிக்க வைத்திருப்பது தான் இப்படியொரு பிரம்மாண்ட வெற்றி அடைய காரணம் என்கின்றனர்.

Dragon NEEK Box Office

தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தை விட வசூலில் 10 மடங்கு அதிகமாக 4 நாட்களில் டிராகன் முன்னேறியுள்ள நிலையில், இரண்டு படங்களின் வசூல் குறித்தும் இங்கே காணலாம் வாங்க.

டிராகன் வசூல்: அதிகாரப்பூர்வமாகவே அர்ச்சனா கல்பாத்தி முதல் 3 நாட்களில் டிராகன் திரைப்படம் 50 கோடி வசூலை கடந்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து விட்டதாக பதிவிட்டுள்ளார். திங்கட்கிழமையான நேற்றும் டிராகன் படத்தின் வசூல் நன்றாகவே இருந்தது. இந்தியளவில் 5.5 கோடி ரூபாய் வசூலை டிராகன் திரைப்படம் 4வது நாளில் வசூல் செய்த நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக இந்தியளவில் 36 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் உலகளவில் 56 கோடி ரூபாய் வசூல் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Dragon NEEK Box Office

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வசூல்: தனுஷ் இயக்கத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் என பலர் நடித்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் திங்கட்கிழமை வெறும் 46 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாம். இதுவரை இந்தியளவில் இந்த படம் 5 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Dragon NEEK Box Office

10 மடங்கு அதிகம்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் 5 கோடி ரூபாய் வசூலையும் டிராகன் திரைப்படம் 56 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியுள்ள நிலையில், 10 மடங்கு அதிக வசூலை பிரதீப் ரங்கநாதன் படம் அள்ளி தனுஷ் இயக்கிய படத்தை பாக்ஸ் ஆபீஸில் ரொம்பவே வீக் ஆக்கியுள்ளதாக ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. அறிமுக நடிகரான பவிஷ் படம் இந்த ஆண்டு வெளியான மற்ற படங்களை விட நல்லாவே பாக்ஸ் ஆபீஸில் வசூல் அள்ளியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

Dragon NEEK Box Office

விடாமுயற்சி வசூலை முந்துமா?: அர்ச்சனா கல்பாத்தி 100 கோடி போஸ்டரை அடுத்த வாரத்திற்குள் வெளியிடுவது உறுதி என்கின்றனர். ஆனால், 150 கோடி வசூல் என டிராகன் படத்தின் போஸ்டர் வெளியானால் தான் வேடிக்கையே என்றும் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் வசூலையும் டிராகன் முறியடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். தமிழ்நாட்டை போலவே ஆந்திரா, தெலங்கானாவிலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்து வருகின்றனர்.

Dragon NEEK Box Office

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X