Dragon Day 2 BO Prediction: உங்களுக்கு சொன்னா புரியாது சார்.. டிராகன் 2வது நாள் வசூல் கணிப்பு இதோ!
சென்னை: ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு பேக் டு பேக் ஹிட் கொடுத்து தயாரிப்பாளர்களை ஹேப்பியாக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பிரதீப் ரங்கநாதனை வைத்து படமெடுத்த அந்த நிறுவனத்துக்கு இந்த முறையும் கைமேல் பலன் கிடைப்பது உறுதி. படம் வெளியாவதற்கு முன்பாகவே போட்ட காசை எடுத்துவிட்டதாக அர்ச்சனா கல்பாத்தி வெளிப்படையாகவே பேட்டி ஒன்றில் கூறியது எந்தளவுக்கு உண்மை என்பது இந்த படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும்.
தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களை வறட்சியான மனநிலைக்கு இயக்குநர்கள் கொண்டு செல்லாமல், அவர்கள் வருவதே கவலைகளை மறந்து ஒரு 2.30 மணி நேரம் ஜாலியாக இருக்கத்தான். அங்கே அடிதடி, ஆக்ஷன் காட்சிகளை மட்டும் நம்பாமல் ரசிகர்களை எந்தளவுக்கு சிரிக்க வைக்க முடியுமோ அந்த அளவுக்கு சில இயக்குநர்கள் பக்காவாக அதை செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டருக்கு வரவைக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்கள் எல்லாம் 100 கோடி அடிக்க காரணமும் அதுதான். அந்த வரிசையில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் 100 கோடி வசூல் அடிக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. அந்த படத்தின் 2வது நாள் வசூல் கணிப்பு குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
டிராகன் சொல்லும் பாடம் என்ன?: டான் படத்தில் சிவகார்த்திகேயன் பொறுப்பில்லாத கல்லூரி மாணவனாக வந்து கடைசியில் தனக்கு இன்ஜினியரிங் சரிபட்டு வராது என டைரக்ஷனுக்கு சென்று இயக்குநர் ஆவது தான் கதை. படிக்காமல் இருந்தால் கூட வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்பதை அந்த படம் சொல்லியிருக்கும். அதற்காக இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு எதிரான விமர்சனங்களும் குவிந்தன. அதையெல்லாம் நன்றாக புரிந்துக் கொண்ட அஷ்வத் மாரிமுத்து, படித்து முன்னேறுவது மட்டுமே நிலைக்கும் என்றும் ஃபிராடுத்தனம் செய்து எவ்வளவு தான் உச்சிக்கு சென்றாலும் ஒரு கட்டத்தில் கீழே பொத்தென விழுந்துடுவடா என இன்றைய இளைஞர்களை பார்த்து கன்னத்தில் அறையாமல் அவர்களை கலகலப்பாக சிரிக்க வைத்து குழந்தைக்கு ஊசி போடுவது போல போட்டிருக்கிறார்.
முதல் நாள் வசூல்: டிராகன் படத்தின் முதல் நாள் வசூல் 6 முதல் 8 கோடி ரூபாய் இந்தியளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் பிக்கப் ஆகியுள்ளது ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு பெரிய பிளஸ். சமீபத்தில் இந்தியில் வெளியான லவ் டுடே ரீமேக் காலை வாரி விட்டாலும் இந்த படம் காப்பாற்றிவிடும் என்கின்றனர். 37 கோடி பட்ஜெட்டில் படத்தை எடுத்துள்ள நிலையில், வார இறுதி நாட்களிலும் அடுத்த மாதம் இறுதி வரை பெரிய படங்கள் ஏதும் இல்லாத நிலையில், டிராகன் வசூல் வேட்டை நடத்தப்போவது உறுதி என்கின்றனர்.
டான் 2 இல்லை டிராகன்: "Kathara kathara kathara ... உண்மையா உழச்சா என்ன ஆனாலும் கூட நிப்போம்னு மறுபடியும் உணர வெச்ச தமிழ் மக்களுக்கு இந்த வெற்றியை மனசார சமர்ப்பிக்கிறேன்.
my film's name is ' Dragon ' 'டிராகன்" என ட்வீட் போட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஷ்வத் மாரிமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.
2வது நாள் வசூல் கணிப்பு: டிராகன் படத்திற்கான டிக்கெட் புக்கிங் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், சனிக்கிழமையான இன்று பல தியேட்டர்களில் ஆரஞ்சு அலர்ட் காணப்படுகிறது. இந்தியளவில் சுமார் 10 கோடி வசூலை சனிக்கிழமை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத கஜ ராஜா படத்திற்கு பிறகு இந்த ஆண்டு தியேட்டர்களின் எண்ணிக்கையும் வசூலும் இந்த படத்துக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 கோடி வசூலை அசால்ட்டாக எடுக்கும் என்கின்றனர். அதற்கு மேல் செல்லுமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











