Dragon First Review: பிரதீப் ரங்கநாதனின் 2வது படம் எப்படி இருக்கு?.. டிராகன் முதல் விமர்சனம்!
சென்னை: ஓ மை கடவுளே படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்புவை வைத்து காட் ஆஃப் லவ் எனும் ஃபேண்டஸி படத்தை இயக்கப் போகிறார். இந்நிலையில், அவர் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கியுள்ள டிராகன் திரைப்படம் இந்த மாதம் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தை சமீபத்தில் பார்த்த பிரபலம் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல் விமர்சனத்தை இங்கே காணலாம்.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதல் படமே பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றிப் படமாக மாறியது.

கிளைமேக்ஸ் காட்சியில் ஆட்டோ டிரைவராக வந்து தன்னை ஒரு நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் கொண்டார். அடுத்து அவர் இயக்கிய லவ் டுடே படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார்.
விக்னேஷ் சிவனை முந்திய அஸ்வத்: பிரதீப் ரங்கநாதன், இவானா, யோகி பாபு நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் திடீரென தாமதமான நிலையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இம்மாதம் வெளியாகிறது.
விடாமுயற்சி படத்துக்காக தள்ளிப்போனது: காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி டிராகன் திரைப்படம் வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் விடாமுயற்சி படம் இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், 2 வாரங்கள் அஜித்துக்காக வழிவிட்டு தனது படத்தை தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துக்குப் போட்டியாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.

டிராகன் முதல் விமர்சனம்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ஓ மை கடவுளே படம் வெற்றிப் பெற்ற நிலையில், டிராகன் திரைப்படமும் பிளாக் பஸ்டர் படம் தான் என எக்ஸிக்யூடிவ் புரொட்யூசரான அதிதி ரவிந்திரநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அஸ்வத் மாரிமுத்து ஒரு கம்ப்ளீட் எண்டர்டெயினரை ரசிகர்களுக்கு கொடுக்க காத்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு பிட்டையும் ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். என்னை சிரிக்கவும், அழவும், ஃபீல் பண்ணவும் வைத்துவிட்டார். அர்ச்சனா கல்பாத்திக்கு வாழ்த்துக்கள் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் லோடிங் என சமீபத்தில் படத்தை பார்த்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
தனுஷ் vs பிரதீப் ரங்கநாதன்: ஒல்லியாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க வந்த நிலையில், தனுஷ் போலவே இருக்காரே என பலரும் கூறினர். இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துக்கு கடும் போட்டியாக பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் இருக்கும் என தெரிகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அஸ்வத் மாரிமுத்துவுக்கு இது ஹிட் அடித்தால் அடுத்து சிம்புவுடன் கண்டிப்பாக ஹாட்ரிக் அடிப்பது உறுதி.


Click it and Unblock the Notifications











