3 நாட்களில் டிராகன் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல்.. கொண்டாட்டத்துடன் வெளியிட்ட தயாரிப்பு தரப்பு!
சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதனின் கோமாளி, லவ் டுடே படங்களை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு டிராகன் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள நிலையில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் பிரதீப்புடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாகியுள்ளது. கடந்த 3 நாட்களில் இந்தப்படம் அதிரடி வசூலை கலெக்ட் செய்துள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்களையும் படம் கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன்: நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து கோமாளி, லவ் டுடே படங்களின்மூலம் கோலிவுட்டில் மாஸாக தன்னை வெளிப்படுத்தினார். கோமாளி படத்தில் இயக்குநராக மட்டுமே செயல்பட்டிருந்தார். படத்தில் ரவி மோகன், காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய என்ட்ரியை பிரதீப்பிற்கு கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தப்படத்தில் தானே இயக்குநராகவும் ஹீரோவாகவும் களமிறங்கினார். இவானாவுடன் லவ் டுடே படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. தற்காலத்திய இளைஞர்களின் லவ் குறித்த பார்வையை இந்தப்படம் வெளிப்படுத்தியது.
டிராகன் படம் : இந்த இரு படங்களின் அதிரி புதிரி வெற்றி குறிப்பாக லவ் டுடே படத்தின் பிரம்மாண்டமான வெற்றி, பிரதீப்பிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து வருகிறது. இதையடுத்து தன்னுடைய இயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். விக்னேஷ் சிவனுடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் அஷ்வத் மாரிமுத்துவுடன் டிராகன் படத்தில் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். இதில் டிராகன் படம் கடந்த 21ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகியுள்ளது. ஓ மை கடவுளே படத்தை தொடர்ந்து இந்தப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றிக்கு சொந்தக்காரராகியுள்ளார் அஷ்வத் மாரிமுத்து.
பிரதீப் ரங்கநாதனை கொண்டாடும் ரசிகர்கள்: இந்தப்படம் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குள்ளாகியுள்ளது. தமிழில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பிரதீப், அஷ்வத் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்ட நிலையில், நேற்றைய தினம் ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட ஆந்திராவின் அடுத்தடுத்த இடங்களில் திரையரங்குகளில் சென்று ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்துள்ளனர். இதன்போது பிரதீப் ரங்கநாதனுக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்ததை பார்க்க முடிந்தது. முன்னதாக லவ் டுடே பிரமோஷனின்போது தன்னை பாடி ஷேமிங் செய்த ரசிகர்கள், தற்போது கொண்டாடி வருவது குறித்து பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு: இந்தப்படத்தின் மூன்று நாட்களின் வசூல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் தற்போது தயாரிப்பு தரப்பான ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் கடந்த மூன்று நாட்களின் அதிகாரப்பூர்வ வசூலை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 50.22 கோடி ரூபாய்களை டிராகன் படம் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதற கதற பிளாக்பஸ்டராக டிராகன் மாறியுள்ளதாகவும் பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து மாஸ் காட்டி வருவதாகவும் மேலும் பெருமிதம் தெரிவித்துள்ளது. மூன்று நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலை டிராகன் படம் தாண்டியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களிலேயே 100 கோடி வசூலை தாண்டும என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











