டிராகன் ஃபயர்தான் போங்க.. இரண்டாவது நாளில் அடித்து நொறுக்கிய வசூல்.. எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?

சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கும் டிராகன் திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியானது லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப்பின் நடிப்பில் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை டிராகனுக்கு கொடுத்திருக்கிறார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

ஓ மை கடவுளே படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே மெகா ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார். இடையில் சில வருடங்கள் படம் எதுவும் இயக்காமல் இருந்த அவர்; தனது காலேஜ் ஜூனியரான பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்குவதாக அறிவித்தார். இதில் பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், விஜே சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

Dragon Pradeep Ranganathan Ashwath Marimuthu

உச்சக்கட்ட எதிர்பார்ப்பு: பிரதீப் ரங்கநாதனை பொறுத்தவரை அவர் இயக்கிய முதல் இரண்டு படங்களான கோமாளி, லவ் டுடே ஆகியவை ஹிட்டடித்தவை. அதிலும் லவ் டுடே திரைப்படம் 100 கோடி ரூபாய்வரை வசூல் செய்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஹீரோவாக அவர் நடிக்கும் இரண்டாவது படம் மற்றும் அவரை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. மேலும் லவ் டுடே கொடுத்த வெற்றியை பிரதீப்பும், ஓ மை கடவுளே கொடுத்த வெற்றியை அஸ்வத்தும் தக்க வைப்பார்களா என்றும் கேள்வி உருவானது.

படம் ரிலீஸ்: படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் இது டான் படத்தின் காப்பி என்று ஓபனாகவே கூறினார்கள். ஆனால் அதனை இயக்குநர் திட்டவட்டமாக மறுத்துவந்தார். இப்படிப்பட்ட நிலைமையில் படமானது கடந்த 21ஆம் தேதி வெளியானது. டான் மாதிரி இருக்குமா இல்லை வேறு மாதிரி இருக்குமா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றார்கள். இது ஒருபக்கம் இருக்க தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் அன்றைய தினம் வெளியானதால் டிராகன் தப்பித்துவிடுமா என்றும் ரசிகர்கள் சந்தேகப்பட்டனர்.

மெகா ஹிட்: ஆனால் டிராகன் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. டான் படத்துக்கும், இந்தப் படத்துக்கும் காலேஜ் பேக் ட்ராப் மட்டும்தான் ஒற்றுமையே ஒழிய; கதையே வேறு. படம் முழுக்க காமெடி, எமோஷன் என ரோலர் கோஸ்டர் போல் படம் அருமையாக பயணித்ததால் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அதிலும் க்ளைமேக்ஸில் இயக்குநர் சொன்ன கருத்து பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. பிரதீப், மிஷ்கின், ஜார்ஜ் மரியன், அனுபமா, விஜே சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோரின் நடிப்பெல்லாம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இப்படி அனைத்து ஏரியாக்களிலும் படம் ஃபுல் ஃபில்லாக இருந்ததால் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்படுகிறது.

வசூலிலும் அதிரிபுதிரிதான்: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டிருக்கிறது. முதல் நாளில் தமிழில் 5.5 கோடி ரூபாய்வரை வசூலித்த திரைப்படம் இரண்டாவது நாளில் பாக்ஸ் ஆஃபிஸை அடித்து நொறுக்கியிருக்கிறது. அதாவது இரண்டாவது நாளான நேற்று டிராகன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 9 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. நேற்றைய தினம் பல தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாகியிருக்கின்றன. இன்றும் அதே நிலைமைதான் தொடர்கிறது. படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதால் கண்டிப்பாக நாட்கள் செல்ல செல்ல வசூலில் பெரிய சாதனையை இந்தப் படம் படைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X