Dude Box Office: ஹாட்ரிக் 100 கோடி வசூல்.. சின்ன கல்லு.. பெத்த லாபம் ரூட்டில் ‘டியூட்’ பிரதீப் ரங்கநாதன்!

சென்னை: தமிழ் சினிமாவில் இதற்கு மேல் எல்லாம் ஸ்டார் நடிகர்கள் உருவாக மாட்டார்கள் என சமீபத்தில், சில பிரபலங்களே கம்பு சுத்தினர். ஆனால், மக்களை கவரக்கூடிய வித்தை யாருக்குத் தெரிந்தாலும் அவர்கள் ஸ்டார் ஆகிவிடுவார்கள் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக பிரதீப் ரங்கநாதன் மாறியுள்ளார்.

தனுஷை தொடர்ந்து அவரை போலவே இருக்கிறார் என்றும் இந்த மூஞ்செல்லாம் ஹீரோவாகிடுச்சு என கலாய்த்து வந்தனர். ஆனால், இன்று பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து தான் நடித்த 3 படங்களையுமே 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களாக மாற்றி சாதனை படைத்துள்ளார்.

Pradeep Ranganathan s Dude movie enters prestigious 100 Crore Club in just 6 Days
Photo Credit:

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படம் 6 நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுத்து 100 கோடி வசூலுக்கு மற்ற நடிகர்கள் போராடி கொண்டிருக்கும் நிலையில், பிரதீப் ரங்கநாதன் பாக்ஸ் ஆபிஸில் சிறிய பட்ஜெட்டில் உருவான படங்களை வைத்து மேஜிக் செய்து வருகிறார்.

லவ் டுடே 100 கோடி: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற கோமாளி திரைப்படம் அதிகபட்சமாக 91 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தையே இன்னும் கொஞ்சம் ப்ரோமோட் செய்திருந்தால் கூட அதுவும் 100 கோடி வசூல் செய்திருக்கும் என்கின்றனர். பிரதீப் இயக்கி ஹீரோவாக அறிமுகமான லவ் டுடே திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்ட முதல் படத்திலேயே செஞ்சுரி அடித்தவர் தற்போது ஹாட்ரிக் செஞ்சுரி அடித்துள்ளார்.

டிராகன் 150 கோடி: 10 ஆயிரம் வாலா சரவெடி என அஸ்வத் மாரிமுத்து இந்த தீபாவளிக்கு அவருடன் சரவெடி வெடித்துக் கொண்டே வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியது மிகை அல்ல என்றும் இந்த ஆண்டு 37 கோடி பட்ஜெட்டில் வெளியான டிராகன் திரைப்படம் 150 கோடி வரை வசூல் ஈட்டி பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட்டை மேலும், உயர்த்தியது.

டியூட் மூலம் ஹாட்ரிக்: இந்நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படம் 6 நாட்களில் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது. டியூட் திரைப்படத்துக்கு ஏகப்பட்ட நெகட்டிவிட்டி விமர்சனங்கள் குவிந்த நிலையிலும், பிரதீப் ரங்கநாதனின் காமெடியான நடிப்பு தான் படத்தை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாற்றியுள்ளது.

4வது 100 கோடி வருமா?: இந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இன்னொரு 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்னொரு 100 கோடி வசூல் செய்தால் இந்த ஆண்டு ஹாட்ரிக் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் 4வது 100 கோடி படமாக எல்ஐகே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X