கையில் தாலி.. தீபாவளிக்கு சூர்யாவுடன் மோதப்போகிறாரா பிரதீப் ரங்கநாதன்?.. Dude ஆக மாறிய டிராகன்!
சென்னை: இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்தார் 2 பொங்கலுக்கு தள்ளிப்போக வாய்ப்புகள் அதிகம் என்றும் சூர்யாவின் 45வது படம் வெளியாகப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அனைவருக்கும் முன்னதாக தீபாவளிக்கு தன்னோட படத்தை ரிலீஸ் செய்யப்போகிறேன் என பிரதீப் ரங்கநாதன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள எல்ஐகே திரைப்படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியாக அவர் நடிப்பில் உருவாகி வரும் 4வது படமான Dude தீபாவளிக்கு வெளியாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஏற்கனவே குட் பேட் அக்லி இந்த ஆண்டு தமிழில் வெளியான நிலையில், இந்த படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெறி மாஸாக வெளியிடப்போகிறது.
150 கோடி பாக்ஸ் ஆபீஸ்: கோமாளி படத்தை இயக்கி ரவி மோகனுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் அடுத்து தனது இயக்கத்தில் தானே ஹீரோவாக நடித்து லவ் டுடே படத்தைக் கொடுத்தார். அந்த படமே 100 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் நடித்த டிராகன் திரைப்படம் 150 கோடி வசூலை தாண்டியது. இந்த ஆண்டு சூர்யா நடித்த ரெட்ரோ படமே 150 கோடி வசூலை தாண்டுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் 100 கோடி வசூலை கூட தொடவில்லை.
பிரதீப் ரங்கநாதனின் 4வது படம்: கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, பரிதாபங்கள் டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'டூட்' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கும் சாய் அபயங்கர் தான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா ரிலீஸாக வெளியாக காத்திருக்கிறது.
தீபாவளி ரேஸில் யாருக்கு வெற்றி?: பிரதீப் ரங்கநாதன் முதல் ஆளாக தீபாவளிக்கு தனது படம் வெளியாகும் என அறிவித்துள்ளார். நடிகர் சூர்யாவின் 'வேட்டைக் கருப்பு' எனக் கூறப்படும் சூர்யா 45 படம் தீபாவளிக்கு வெளியாகுமா? அல்லது கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் வெளியாகுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், சில படங்களும் தீபாவளி போட்டியில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்னேஷ் படம் எப்போ ரிலீஸ்?: பிரதீப் ரங்கநாதன் எல்ஐகே திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட டிராகன் படமே வெளியாகி வெற்றிப் பெற்றது. அடுத்து உருவாகி வரும் டூட் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகி விட்டது. LIK திரைப்படம் அதற்கு முன்னதாக வெளியாகுமா? அல்லது அடுத்த ஆண்டு தான் வெளியாகுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. கையில் தாலியுடன் பார்க்க அப்படியே தனுஷ் போல மிரட்டலான லுக்கில் பிரதீப் ரங்கநாதன் டூட் போஸ்டரில் தாறுமாறாக உள்ள நிலையில், அடுத்த வெற்றியும் கன்ஃபார்ம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











