Dude Day 3 Box Offie - தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதன்தான் டாப்.. டியூட் 3வது நாள் வசூல் சூப்பர்
சென்னை: பிரதீப் ரங்கநாதன் டியூட் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருக்கிறார். தயாரிப்பு நிறுவவனம் வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புபடி பார்த்தால்; இப்படத்தின் வசூலும் நூறு கோடி ரூபாயை அள்ளி டிராகன், லவ் டுடே பட வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் வெளியான மூன்றாவது நாளில் படம் எத்தனை கோடி வசூலித்திருக்கிறது என்ற தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
பிரதீப் ரங்கநாதனின் வளர்ச்சியை பார்க்கையில் இன்னும் சில காலத்தில் 2கே கிட்ஸ்களின் சூப்பர் ஸ்டார் என்ற இடத்துக்கு நகர்ந்துவிடுவார் போல்தான் தோன்றுகிறது. லவ் டுடே படம் நூறு கோடி ரூபாயை வசூலித்தபோது இதெல்லாம் லக்கில் வந்தது என்றார்கள் ஒருதரப்பினர். ஆனால் அடுத்ததாக வெளியான டிராகன் திரைப்படமும் அதையே செய்து; இதெல்லாம் லக்கில் இல்லை; கடுமையான மற்றும் நேர்மையன உழைப்பில் வந்தது என்பதை உணர்த்தியது.
டியூடும் அதேதான்: தற்போது கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் நடித்திருக்கும் டியூட் திரைப்படம் கடந்த 17ஆம் தேதி ரிலீஸானது. நடிகை மமிதா பைஜூ இந்தப் படத்தில் நடித்து கோலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களின் ட்ரெய்லர் போல் இதுவும் ரொம்பவே கவர்ந்தது. இதன் காரணமாகவும் படத்துக்கு ஹைப் ஏறியது. அதே ஆவலோடு குடும்பம் குடும்பமாக சென்றார்கள்.

எப்படி இருக்கு படம்: போட்டிக்கு இரண்டு படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படத்தின் டிக்கெட்டுகள்தான் அதிகம் விற்றன. படமும் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகிவிட்டது. முக்கியமாக, படத்தில் ஏகப்பட்ட கமர்ஷியல் விஷயங்கள் இருந்தாலும் இயக்குநர் தான் சொல்ல நினைத்த அற்புதமான மெசேஜை சொல்லிவிட்டார். இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறினாலும் ஆடியன்ஸ் பெரிதாக சோர்வடையவில்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: விமர்சன ரீதியாக படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான். அதேபோல் வசூலிலும் சக்கைப்போடு போடுவதாக தெரிகிறது. படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், டியூட் இரண்டு நாட்களில் உலக அளவில் 45 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனால் பிரதீப்பின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதன் மூலம் அவர் ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது நாள் வசூல்: தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு ஒருபக்கம் இருக்க; Sacnilk இணையதளம் மூன்றாவது நாளில் டியூட் படம் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று இப்படம், 10.50 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். அந்த இணையதள கூற்றுப்படி பார்த்தால், இந்தியாவில் மட்டும் மொத்தம் 30.35 கோடி ரூபாய் வசூலித்து டாப்பில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











