LIK Final Box Office: யூத் படத்தை விட கம்மி.. கர படத்தை விட அதிகம்.. எல்ஐகே இறுதி வசூல் இவ்வளவு தானா!

சென்னை: நயன்தாரா மற்றும் லலித் குமார் இணைந்து தயாரித்த எல்ஐகே திரைப்படம் நேற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. தொடர்ந்து 100 கோடி நாயகன் என்கிற பெயரை பெற்று வந்த பிரதீப் ரங்கநாதனுக்கு முதல் ஃப்ளாப் படமாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மாறியுள்ளது. இந்நிலையில், படத்தின் இறுதி வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, சீமான், மாளவிகா, எஸ்.ஜே. சூர்யா, ஆனந்த்ராஜ், சுனில், யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Pradeep Ranganathan s LIK 25 Days Box Office Collection Officially Revealed

படம் வெளியான முதல் நாளே கலவையான விமர்சனங்கள் வெளியான நிலையில், பாக்ஸ் ஆபீஸில் பலத்த அடி வாங்கியது.

எல்ஐகே இறுதி வசூல்: ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே திரைப்படம் 25 நாட்களில் இதுவரை உலகளவில் 66.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வசூலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடைசியாக 2 வாரத்தில் படம் 50 கோடி வசூலை கடந்ததாக போஸ்டர் வெளியானது. 50வது நாள் போஸ்டருடன் 100 கோடி போடுவீங்களா பாஸ் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

யூத் படத்தை விட கம்மி: கென் கருணாஸ் இயக்கி நடித்து வெளியான யூத் திரைப்படம் 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் வெளியாகி 82 கோடி வசூல் சாதனையை படைத்தது. ஆனால், சுமார் 90 முதல் 100 கோடி பட்ஜெட்டில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வெறும் 66 கோடி தான் உலக வசூல் என அறிவிப்பதற்கு உண்மையாகவே நீங்க வெட்கப்படணும் செண்றாயன் என கலாய்த்து வருகின்றனர். மேலும், விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்த பிரதீப் ரங்கநாதனுக்கு முதல் ஃப்ளாப் பரிசாக கிடைத்து விட்டது என்றும் கூறுகின்றனர்.

Pradeep Ranganathan s LIK 25 Days Box Office Collection Officially Revealed

கர படத்தோட அதிகம்: தனுஷின் கர திரைப்படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியான நிலையில், இதுவரை 40 கோடி ரூபாய் வசூலை மட்டுமே அந்த படம் ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர். தொடர்ந்து தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக தியேட்டர்கள் எல்லாம் வெறிச்சோடி காணப்படுவது தான் இந்த படமும் பெரிதாக ஓடாததற்கு காரணம் என்கின்றனர்.

ஓடிடியில் எல்ஐகே: விஜய் சிஎம் ஆவாரா? மாட்டாரா? தமிழ்நாடு அரசியலின் நிலை என்ன ஆகப்போகுது என்பதிலேயே ரசிகர்கள் அதிகளவில் பிசியாக இருந்த நிலையில், மே 6ம் தேதி சைலன்ட்டாக ஓடிடியில் எல்ஐகே திரைப்படம் வெளியாகி வீட்டில் சம்மர் ஹாலிடேவில் இருக்கும் குழந்தைகளை என்டர்டெயின் செய்து வருகிறது. அமேசான் பிரைம் வீடியோவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், சீமான், எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள எல்ஐகே படத்தை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X