பிரதீப் ரங்கநாதனின் LIK ஜூலையில் வெளியாகிறாதா? விக்னேஷ் சிவனின் மாஸ்டர் பிளான்!
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி நடித்த 'LIK' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாமல் போனது. படம் எப்போது வெளியாகும் என அனைவரும் காத்திருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகி, பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பிரதீப் ரங்கநாதன்:அறிமுக இயக்கின கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் ரோகினி நடித்த டியூட் திரைப்படம், தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த திரைப்படத்தில் சரத்குமார் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியான ஒரே வாரத்தில் நூறு கோடியை வசூலித்தது. டியூட் திரைப்படத்தோடு, விக்னேஷ் சிவன் இயக்கிய எல்.ஐ.கே திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டியூட் படம் வெளியானதால், எல்.ஐ.கே திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியானது.

ஜூலையில் ரிலீஸ்?: LIK திரைப்படத்தின் டிஜிட்டல் ரைட்சை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொலைக்கு வாங்கியதாக சொல்லப்டுகிறது. அமேசான் நிறுவனம் படத்தை பார்த்துவிட்டு, படம் நன்றாக இருப்பதாக தெரிவித்து பெரிய தொலைக்கு படத்தை வாங்கி இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், படத்தில் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்கள் படம் எப்போது வெளியாகும் என கேட்டு வரும் நிலையில், 'LIK' படம் ஜூலை மாதம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
எதிர்பார்க்கும் ரசிகர்கள்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, சீமான் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள எல்ஐகே படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் டீசர் பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாள் அன்று வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.


Click it and Unblock the Notifications











