மீண்டும் மீண்டுமா?.. கண்டுக்காத பிரதீப் ரங்கநாதன்.. LIK ரிலீஸ் தள்ளிப்போகிறதா?.. என்ன பிரச்னை?

சென்னை: அஜித் குமாரை வைத்து படம் எடுக்க முடியாமல் போனதில் இருந்தே விக்னேஷ் சிவனுக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது என கோலிவுட்டில் பேசத் தொடங்கியது 2026ம் ஆண்டு ஏப்ரல் வரை பஞ்சாயத்து ஓயாது போல என்றே தோன்றுகிறது.

அஜித் குமாரின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற விக்னேஷ் சிவன் சில பல காரணங்களால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர், அவர் பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை ஆரம்பித்தார்.

Pradeep Ranganathan s LIK Movie may get postponed again
Photo Credit:

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே, அப்படித்தான் LIC டைட்டிலில் ஆரம்பித்த பிரச்னை LIK என மாறிய பின்னரும் இன்னமும் ரிலீஸ் சிக்கல் தீரவில்லை என்கின்றனர்.

ஏப்ரல் 3 ரிலீஸ் டவுட்டு தான்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால், கடைசியில் டியூட் படம் வெளியாக முடிவெடுத்த நிலையில், டிசம்பர் 18க்கு தள்ளிப்போனது. ஆனால், அப்போதும் லலித் குமார் மகன் அக்‌ஷய் குமாரின் சிறை படம் வெளியான நிலையில், மீண்டும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ரிலீஸ் தள்ளிப்போனது. காதலர் தினத்துக்கு வரும் என்றார்கள், அதன் பின்னர், ஏப்ரல் 3 என கடைசியாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதுவும் டவுட்டு தான் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

சம்பள பாக்கி: பிரதீப் ரங்கநாதனுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கி இன்னமும் உள்ளது தான் இந்த பிரச்னைக்கு காரணம் என்கின்றனர். அதனால் தான் படம் தொடர்பாக எந்தவொரு வாய்ஸும் கொடுக்காமல் பிரதீப் சைலன்ட்டாக தனது அடுத்த பட வேலையில் பிசியாக உள்ளாராம். விக்னேஷ் சிவன் எப்படியாவது ஏப்ரல் 3 படம் ரிலீஸ் ஆகிவிடும் என எதிர்பார்த்த நிலையில், படம் இப்போதைக்கு வர வாய்ப்பில்லை என்கின்றனர்.

தள்ளிப்போன படங்கள்: பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே படம் ஏப்ரல் 3 ரிலீஸ் என அறிவித்தவுடனே லெஜண்ட் சரவணாவின் லீடர் மற்றும் பரத்தின் காளிதாஸ் 2 படங்கள் அடுத்த ஒரு வாரத்துக்கு தள்ளிப்போனது. இந்நிலையில், ஏப்ரல் 10 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டால் மேலும், சிக்கல் உண்டாகும் என்கின்றனர். க்ரித்தி ஷெட்டி நடித்த வா வாத்தியார் படமே இதே போல சிக்கல்களை சந்தித்து ரிலீஸ் ஆன நிலையில், ஃபிளாப் ஆனது. ரவி மோகன் உடன் நடித்த ஜீனி படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. LIK படமும் போச்சுன்னா அவ்ளோ தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X