பொங்கல் படங்களே போட்டிப் போட்டு ப்ரோமோஷன் பண்றாங்க.. பிரதீப் ரங்கநாதன் LIK என்ன ஆச்சு?

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் மற்றும் கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன் பிறகு எந்தவொரு ப்ரோமோஷன் பணிகளும் ஆரம்பிக்கவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் அதிகபட்சமாக 150 கோடி வசூல் செய்த நிலையில், தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

Pradeep Ranganathan s LIK team in silent mode for their movie promotion shocks fans
Photo Credit:

25 நாட்கள் தியேட்டர்களில் வெற்றிகரமாக அந்த படம் ஓடியதாக போஸ்டர்கள் எல்லாம் வெளியான நிலையில், அதன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன. ஆனால், அவரது அடுத்த படமான எல்ஐகே திரைப்படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்றும் ஒருவேளை படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா என ரசிகர்கள் டவுட்டுகளை கிளப்ப ஆரம்பித்துள்ளனர்.

தீபாவளி மிஸ் ஆகிடுச்சு: முன்னதாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் லேட்டாக உருவாகி லேட்டஸ்ட்டாக தீபாவளி ஸ்லாட்டை பிடித்து டிராகன் படத்தின் வெற்றியையும் டியூட் திரைப்படம் முதல் வார விடுமுறை நாட்களை பயன்படுத்தி அள்ளிவிட்டது. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் தான் அடிவாங்கும் என்பதை கருத்தில் கொண்டு டிசம்பர் 18ம் தேதி எல்ஐகே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

மயான அமைதி: டியூட் திரைப்படமும் வெளியாகி கலாச்சார வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த 100 கோடி வசூலை ஈட்ட தேவையான ப்ரோமோஷன் பணிகளை விக்னேஷ் சிவன் இந்நேரம் ஆரம்பித்து இருக்க வேண்டாமா என்றும் பிரதீப் ரங்கநாதனும் தன் பங்கிற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்துக்கான ப்ரோமோஷனை துவங்கியிருக்கலாமே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இதுவரை தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழு புதிதாக பாடல்களை வெளியிடுவது, டிரைலர் வெளியிடுவது, இசை வெளியீட்டு விழா அப்டேட் என எதையுமே அறிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் வருத்தத்துடன் உள்ளனர்.

டிசம்பரில் பார்த்துக்கலாம்: டிசம்பர் மாதம் தொடங்கியதும் 18 நாட்கள் உள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகளை சூடு பிடிக்க பார்த்துக்கொள்ளலாம் என்கிற நிலைப்பாட்டில் படக்குழு உள்ளதா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அனிருத் இசை பணிகளை முடித்துக் கொடுத்து விடவில்லையா? அதனால் தான் தாமதம் ஆகிறதா என்றும் சொன்ன தேதியில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை வெளியிட்டு விடுங்க சீக்கிரமே தமிழ்நாடு 2040ல் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறோம் என விக்னேஷ் சிவனிடம் ரசிகர்கள் நச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில், தனது மனைவி நயன்தாராவுடன் மகா காலேஷ்வரர் கோயிலில் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்த நிலையில், சீக்கிரமே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் தொடர்பான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X