Pradeep: பிரதீப்பின் அடுத்தப்படம்.. ஃபயராக வெளியானது டைட்டில்.. அட சூப்பரப்பு!
சென்னை: நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள சூழலில் அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் பிரதீப். இந்த படத்தின் டைட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட சூழலில் அறிவித்தபடி டைட்டில் வெளியாகவில்லை.
இதனால் ரசிகர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய சூழலில் தற்போது இரண்டு மணி அளவில் இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. டைட்டில் ஃபயராக இருக்க வேண்டும் என்று அர்ச்சனா கல்பாத்தி நேற்றைய தினம் கூறிய சூழலில், இன்றைய தினம் டைட்டிலை ஃபயருடன் தெறிக்க விட்டுள்ளனர் படக் குழுவினர். இதையொட்டி டைட்டில் பிரமோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்: ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் உருவான லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகம் ஆனார். இந்த படம் அவரை உச்சாணியில் ஏற்றியது. தொடர்ந்து மோஸ்ட் வான்டட் ஹீரோவாகி இருக்கிறார் பிரதீப். ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெளியான லவ் டுடே படம், 75 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தில் பிரதீப், இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
விக்னேஷ் சிவனுடன் கூட்டணி: லவ் டுடே படத்தின் கதைக்களம் ரசிகர்களை கட்டி போட்டது. இந்தப் படம் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூவை ஏகத்துக்கும் எகிற செய்துள்ளது. தற்போது தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார் பிரதீப். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரதீப்புடன் எஸ்ஜே சூர்யா, கீர்த்தி செட்டி உள்ளிட்ட பலர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும் இந்த ஆண்டிலேயே படம் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைவதற்கு முன்னதாகவே அடுத்த படத்திலும் பிரதீப் ரங்கநாதன் தற்போது கமிட் ஆகியுள்ளார்.

டைட்டில் வெளியாவதில் தாமதம்: ஓ மை கடவுளே என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் இன்று காலை 9 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து டைட்டில் குறித்த பல்வேறு ப்ரமோஷன்கள் நேற்றைய தினம் வெளியானது. டைட்டில் ஃபயராக வேண்டும் என்று அர்ச்சனா கல்பாத்தி கேட்பதாக இந்த பிரமோவில் காணப்பட்டது. ஃபயராக தானே வேண்டும், வச்சிடுவோம் என்று அஸ்வத் மாரிமுத்துவும் கூறுவதாகவும் இந்த பிரமோ வில் காணப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் குறிப்பிட்டபடி வெளியாகவில்லை.
டிராகன் டைட்டில்: இந்நிலையில் தற்போது இரண்டு மணியளவில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது குறித்த பிரமோவில் இயக்குனர் அஸ்வத் அர்ச்சனா கல்பாத்தியிடம் மேடம் ஃபயராக தானே டைட்டில் கேட்டீர்கள் என்று கேட்க அவரும் ஆமாம் என்று கூறுவதாக காணப்பட்டது தொடர்ந்து அவர் ஒரு பொத்தானை அமுக்க டைட்டில் ஃபயராக வெளிப்படுகிறது. படத்திற்கு டிராகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் அஸ்வத், பிரதீப், அர்ச்சனா, மிஷ்கின் உள்ளிட்ட பலரும் இணைந்ததை பார்க்க முடிந்தது. மேலும் படத்தின் ஷூட்டிங் இன்றைய தினம் அனைவரது ஆசீர்வாதத்துடன் துவங்கி உள்ளதாகவும் இந்த டைட்டில் ப்ரோமோவில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











