ஆங்கில பாடலுக்கு முன்னாள் ஹீரோயின் அசத்தல் டான்ஸ்.. அந்த ஹீரோ மாதிரி ஆடறீங்களே..புகழும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல அம்மா நடிகை ஆங்கில பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சில சினிமா படங்களில் அம்மா ரோலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. சும்மா வந்துபோவது போலதான் இருக்கும்.
இதனால், தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை என நினைக்கும் அம்மா கேரக்டர்களில் நடிக்கும் சில முன்னாள் ஹீரோயின்கள், அதற்கு, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி கொள்கின்றனர்.

அம்மா நடிகை
இதில் தங்களது நடன திறமையை வெளிப்படுத்தும் விதமாக சில அம்மா நடிகைகள் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் நடிகை, பிரகதி. இவர், தமிழில் கே.பாக்யராஜின் வீட்ல விசேஷங்க, விஜயகாந்த் நடித்த பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உட்பட பல படங்களில், ஹீரோயினாக நடித்தவர்.

இனிமே இப்படித்தான்
தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள பிரகதி, இப்போது தமிழ், தெலுங்கில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார். சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து, தாரை தப்பட்டை உட்பட பல படங்களில் அம்மாவாக நடித்துள்ளார். சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், மூத்த காமெடி நடிகர் ஒருவர் அவரிடம் பாலியல் ரீதியாக, தகாத முறையில் நடந்துகொண்டது பற்றி கூறியிருந்தார்.

ஸ்டைலாக நடனம்
கடந்த சில மாதங்களுக்கு விஜய்யின் மாஸ்டர் படதின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி, வீடியோ வெளியிட்டிருந்தார். இது வைரலானது. இதையடுத்து ஒர்க் அவுட்டின்போது, மேற்கத்திய இசைக்கு ஸ்டைலாக நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார். 'மோசமான முயற்சி இல்லை' என்று அதில் கூறி இருந்தார். அதற்கும் ரசிகர்களிடம் இருந்து ஏராளமான லைக்ஸ் கிடைத்தன.

அமைதிப்படுத்துங்கள்
இப்போது மீண்டும் ஓர் ஆங்கில பாடலுக்கு நடனம் ஆடி, வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு கேப்ஷனாக, புயலை அமைதிப்படுத்துவதை நிறுத்துங்கள். உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள், புயல் தானாகவே கடந்து செல்லும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவில் அவர் வளைந்து நெளிந்து ஆடுவது அசத்தலாக இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மிரட்டல் டான்ஸ்
உங்களிடம் இருந்து இன்னொரு மிரட்டல் டான்ஸ்.. வாழ்த்துகள் என்று சிலர் கூறியுள்ளனர். வயது என்பது ஒரு எண்ணிக்கைத்தான் என்பதை உங்கள் நடனம் நிரூபித்துவிட்டது என்று சிலர் தெரிவித்துள்ளனர். தெலுங்கு ஹீரோ ரவிதேஜா மாதிரியே ஆடறீங்களே என்று சிலரும் ஒவ்வொரு வருடமும் நீங்க மட்டும் இளமையா இருக்கீங்களே எப்படி? என்று சிலரும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











