தனது ஆவேச நடனத்தை ட்ரோல் செய்த ரசிகர்.. அதிரடியாக அப்படி பதிலடி கொடுத்த பிரபல அம்மா நடிகை!

By

சென்னை: தனது நடனத்தை கிண்டலடித்தவருக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் பிரபல அம்மா நடிகை.

தமிழில் கே.பாக்யராஜின் வீட்ல விசேஷங்க, விஜயகாந்தின் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உட்பட பல படங்களில், ஹீரோயினாக நடித்தவர் பிரகதி.

தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள பிரகதி, இப்போது தமிழ், தெலுங்கில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

தகாத முறையில்

தகாத முறையில்

சீரியல்களிலும் நடித்து வரும் இவர், சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து, தாரை தப்பட்டை உட்பட பல படங்களில் அம்மாவாக நடித்துள்ளார். சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், மூத்த காமெடி நடிகர் ஒருவர் அவரிடம் பாலியல் ரீதியாக, தகாத முறையில் நடந்துகொண்டது பற்றி கூறியிருந்தார். இந்தச் செய்தி பரபரப்பானது.

வாத்தி கம்மிங் டான்ஸ்

இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில், ஒர்க் அவுட் வீடியோக்களையும் பாடல்களுக்கு நடனம் ஆடும் வீடியோவையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடி கடந்த சில மாதங்களுக்கு முன் வீடியோ வெளியிட்டிருந்தார். இது வைரலானது. பின்னர் ஒர்க் அவுட்டின்போது, மேற்கத்திய இசை ஒன்றுக்கு வெஸ்டர்ன் ஸ்டைலில் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார்.

ஹம்மா ஹம்மா பாடல்

ஹம்மா ஹம்மா பாடல்

'மோசமான முயற்சி இல்லை' என்று அதில் கூறி இருந்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் கண்டபடி கலாய்த்தனர். பலர் பாராட்டி இருந்தனர். மனசளவுல நீங்க இளமையாதான் இருக்கீங்க.. ஆனா.. எதுக்கு இப்படி? என்று கேட்டிருந்தனர். இந்நிலையில் இப்போது, ஹம்மா ஹம்மா அந்த அரபிக்கடலோரம் என்ற ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதுதான் காரணமா?

இதுதான் காரணமா?

இதையடுத்து சிலர் அவரை பாராட்டியுள்ளனர். நீங்கள் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள், இந்த வயசுலயும் நீங்க இளமையாக இருக்க இதுதான் காரணமா? என்று கேட்டுள்ளனர். சிறப்பு இன்னும் இதுபோன்று பல வீடியோ போஸ்ட் பண்ணுங்க என்று சிலர் கூறியுள்ளனர். இதற்கிடையே சிலர் அவரை ட்ரோல் செய்துள்ளனர். வழக்கமாக அதுபோன்ற ட்ரோல்களை கண்டுகொள்ளாத பிரகதி, இப்போது வசமாக விளாசியுள்ளார்.

முட்டாளாக்க வேண்டாம்

முட்டாளாக்க வேண்டாம்

ஒருவர், இந்த வயசுல உங்களுக்கு இது தேவையா என்று கேட்டிருந்தார். அதற்கு அதிரடியாக பதிலளித்த பிரகதி, 'உடல் ஆரோக்கியம் எந்த வயதிலும் முக்கியம். அது உங்கள் அம்மாவாக இருந்தாலும் சரி, எங்கள் அம்மாவாக இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் சரி. இந்த நடனம் உடல் ஆரோக்கியத்திற்காக. இதுபோன்ற கேவலமான கருத்துக்களை வெளியிட்டு உங்களை நீங்களே முட்டாளாக்க வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X