ரஜினியை சந்தித்து ஆசி பெற்றார் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா.. ராகவேந்திரர் படம் கொடுத்து வாழ்த்து!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நல்ல படங்கள், நல்ல விஷயங்களை பாராட்டு மனநிலை கொண்டவர்.

தொடர்ந்து இதை அவர் நடைமுறைப்படுத்தி வருகிறார். சிறப்பான படங்கள் வெளியானால் அதை தொலைபேசிமூலமும் பாராட்டி வருகிறார்.

சமீபத்தில் இயக்குநர் பார்த்திபனை நேரில் அழைத்து அவரது இரவின் நிழல் படத்திற்காக பாராட்டியிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். 70 வயதை கடந்த நிலையிலும் இவரது எனர்ஜி, தொடர்ந்து இளம் நாயகர்களுக்கு சவால்விடும் வகையில் அமைந்துள்ளது. அடுத்தடுத்து ஹீரோவாகவே படங்களில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் அண்ணாத்த படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தலைவர் 169 படம்

தலைவர் 169 படம்

தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் இணைந்துந்துள்ளார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வாழ்த்தும் நடைமுறை

வாழ்த்தும் நடைமுறை

இதனிடையே சிறப்பான படங்கள், நிகழ்வுகளை உடனுக்குடன் வாழ்த்தும் செயல்பாட்டை சமீபகாலங்களில் ரஜினியிடம் அதிகமாக காண முடிகிறது. மேலும் சக நடிகர்களின் சுக துக்கங்களிலும் கலந்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் நடிகை மீனாவின் கணவர் இறந்தபோது நேரில் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

புதிய படங்களுக்கும் வாழ்த்து

புதிய படங்களுக்கும் வாழ்த்து

இதேபோல நடிகை நயன்தாரா திருமணத்தில் கலந்துக் கொண்டு தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். புதிதாக வெளியாகும் பல படங்களை, அது லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் படம் சிறப்பாக அமையும்பட்சத்தில் அதை பாராட்டும் மனம் ரஜினியிடம் காணப்படுகிறது. சமீபத்தில் இயக்குநர் பார்த்திபனை நேரில் சந்தித்து அவரது இரவின் நிழல் படத்திற்காக பாராட்டியிருந்தார் ரஜினி.

பிரக்னானந்தாவுக்கு ரஜினி ஆசி

பிரக்னானந்தாவுக்கு ரஜினி ஆசி

இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற செஸ் சாம்பியன் பிரக்னானந்தா நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசிப்பெற்றார். மேலும் இந்த அளவிற்கு சிறப்பான நடிகராக இருந்தபோதிலும் அவரது எளிமை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நாளை தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிராண்ட் மாஸ்டர் பிரக்னானந்தா

கிராண்ட் மாஸ்டர் பிரக்னானந்தா

16 வயதான கிராண்ட் மாஸ்டர் பிரக்னானந்தா, உலகின் தலைசிறந்த செஸ் சாம்பியனான கார்ல் சன்னை தோற்கடித்து சர்வதேச அளவில் புகழடைந்தவர். பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சர்வதேச கவனத்தை பெற்றுவருகிறார். இந்நிலையில், இவரை தனது இல்லத்திற்கு வரவழைத்த அவருக்கு ஆசி வழங்கியுள்ளார் ரஜினிகாந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X