உங்க அழகுக்கும் திறமைக்கும் நல்ல வாய்ப்புகள் டோரைத் தட்டும்.. பிரபல நடிகைக்கு ரசிகர்கள் ஆருடம்!

By

சென்னை: உங்க அழகுக்கும் திறமைக்கும் வாய்ப்புகள் தேடி வரும் என்று பிரபல நடிகைக்கு ஆருடம் கூறியுள்ளனர் ரசிகர்கள்.

உலகையே மிரட்டிக் கொண்டிருக்கிறது கொரோனா. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

லாக்டவுன் நீட்டிப்பு

லாக்டவுன் நீட்டிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆக உயர்ந்திக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் முயற்சி எடுத்தாலும் தொடர்ந்து இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனை தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் அடுத்த மாதம் 31 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளன.

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

லாக்டவுனால் பொதுமக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கும் நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். வீட்டில் இருந்தபடி, தாங்கள் செய்யும் ஒர்க் அவுட், டான்ஸ், சமையல் உள்ளிட்ட வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.

பிரக்யா ஜெய்ஸ்வால்

பிரக்யா ஜெய்ஸ்வால்

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளில் ஒருவர் பிரக்யா ஜெய்ஸ்வால். தெலுங்கு நடிகையான இவர் தமிழில் விரட்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் இவர் நடித்துள்ள சில படங்கள் தமிழ், மலையாள மொழிகளிலும் டப் ஆகியுள்ளன. இந்தியிலும் நடித்துள்ளார். இருந்தாலும் பெரிய ஹிட் கொடுக்காததால் அவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை.

அழகின் சின்னம்

அழகின் சின்னம்

இவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோவுக்கு ஆயிரக்கணக்கானோர் லைக்ஸ்களை குவித்துள்ளனர். இந்த போட்டோவைதான் ஏற்கனவே போட்டாச்சே, திரும்பவும் ஏன்? லாக்டவுன் காரணமா? என்று சிலர் கேட்டுள்ளனர். உங்க புன்னகை அப்படியிருக்கு, செம என்று சிலர் வர்ணித்துள்ளனர். ஒருவர், நீங்கதான் அழகின் சின்னம் என்று வழிந்துள்ளார். நீங்க தகதகன்னு மின்னுறீங்க, உங்களைப் பார்த்தா சூரிய ஒளியை பார்க்கிற மாதிரி இருக்கு என்று ஒருவர் வர்ணித்திருக்கிறார்.

வெயிட் பண்ணுங்க

வெயிட் பண்ணுங்க

இன்னும் சிலர், அவரை அப்படி இப்படி புகழ்ந்துள்ளனர். சில ரசிகர்கள், ஒரே ஒரு பதில் போடுங்களேன் என்று கெஞ்சியுள்ளனர். வெயிட் பண்ணுங்க, உங்க அழகுக்கும் திறமைக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்று ஆருடம் சொல்லி இருக்கிறார், ஒரு ரசிகர். நீங்க வேற லெவல் அழகி, என் காதலை ஏத்துக்கறீங்களா? என்று சில நெட்டிசன்கள் வழிந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X