இந்த ஹீரோயினுக்கும் ஆரம்பிச்சாச்சா அந்த ஆர்மியை? அட போங்க பாஸூ.. ரசிகர்கள் கெக்கே பிக்கே கலாய்!
சென்னை: பிரபல நடிகைக்கும் ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்துள்ளதை அடுத்து அதை சிலர் கலாய்த்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளில் ஒருவர் பிரக்யா ஜெய்ஸ்வால்.
தமிழில் விரட்டு என்ற படத்தில் நடித்துள்ள இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

வாய்ப்புகள் இல்லை
தெலுங்கில் இவர் நடித்துள்ள சில படங்கள் தமிழ், மலையாள மொழிகளிலும் டப் ஆகியுள்ளன. இந்தியிலும் நடித்துள்ளார். பெரிய ஹிட் கொடுக்காததால் அவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. கொரோனா லாக்டவுனால் சமூக வலைதளப்பக்கம் நடிகர், நடிகைகள் இப்போது அதிகம் திரும்பியுள்ளனர்.

ரசிகர்கள் லைக்ஸ்
பல நடிகைகள் தாங்கள் செய்யும் ஒர்க் அவுட், டான்ஸ், சமையல், யோகா உள்ளிட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். பிகினி உள்ளிட்ட த்ரோபேக் போட்டோக்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர். கமென்ட்ஸ்களுக்கும் பஞ்சமில்லை.

பிரக்யா ஜெய்ஸ்வால்
அப்படி போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் நடிகைகளில் ஒருவர், பிரக்யா ஜெய்ஸ்வால். அவர் இப்போது கருப்பு டிரெஸ்சில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். செமகிளாமரான இந்த புகைப்படங்களுக்கு, சாதாரண விஷயங்களில் இருந்து தப்பிக்க என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

பிரக்யாவுக்கு ஆர்மியா?
இதற்கு பலர் ஜாலியாக கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். பிரக்யா ரசிகர்கள் 'பிரக்யா ஆர்மி'யை ஆரம்பித்திருக்கிறார்கள். இதைக் கண்டு அவருக்கு நிஜமாகவே வெட்கம் வந்திருக்கும். சிலர் இந்த ஆர்மியை ஜாலியாக கலாய்த்துள்ளனர். அந்த ஆர்மியில் இருந்து ஒருவர் ஹேர்ஸ்டைல் சூப்பர் என்று ஒருவர் கூற, நன்றி தெரிவித்திருக்கிறார்.
Recommended Video

பர்பெக்ட் காம்போ
அழகு பொம்மை மாதிரி இருக்கீங்க, ஆசம், ஸ்டன்னிங் என்று பலர் வர்ணித்துள்ளனர். கருப்பு டிரெஸ் உங்களுக்கு செமயா இருக்கு என்றும் சிலர் கூறியுள்ளனர். கருப்பும் உங்களுக்கு பர்பெக்ட் காம்போ என்று தெரிவித்துள்ளனர். நடிகையின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











