Pragya Nagra: கெட்டக் கனவா இருக்கக் கூடாதா?.. வீடியோ லீக்கான விவகாரம்.. பிரக்யா நாக்ரா விளக்கம்!

சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் இளம் நடிகை பிரக்யா நாக்ரா கடந்த 2 நாட்களாக ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். அதற்கு காரணமே அவரது பிட்டு வீடியோ லீக் ஆனதாக ஏகப்பட்ட நெட்டிசன்கள் அந்த வீடியோவை பார்க்க ஆர்வம் காட்டி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தது தான்.

கடந்த 2 நாட்களாக பிரக்யா நாக்ராவின் பிரைவேட் வீடியோ டிரெண்டான நிலையில், பிரக்யா நாக்ரா சற்றுமுன் தனது ட்விட்டர் பகக்த்தில் அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்றும் அது ஏஐ எடிட் என விளக்கம் அளித்துள்ளார்.

pragya nagra heroine

தன்னை போல இனிமேல் எந்தவொரு நடிகையும் இப்படி ஆபாசமான டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கக் கூடாது என்றும் சைபர் போலீஸார் இந்த அசிங்கத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ராஷ்மிகா, சமந்தா, ஓவியாவை தொடர்ந்து: விஞ்ஞான வளர்ச்சி எப்போதுமே நல்லதை விட அதி வேகமாக கெட்டதுக்குத் தான் பயன்பட்டு வருகிறது. செல் போனில் கேமரா வந்ததில் இருந்தே பல ஆபாச வீடியோக்கள் உலா வரத் தொடங்கி விட்டன. சமீப காலமாக டீப் ஃபேக் எனும் ஏஐ வசதி மூலம் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எக்கச்சக்கமாக எடிட் செய்யப்பட்டு ஆபாச தளங்களில் எல்லை மீறி அரங்கேறி வருகின்றன. ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், சமந்தாவின் நிர்வாண குளியல் புகைப்படம் என ஒரு டீப் ஃபேக் புகைப்படம் டிரெண்டானது. சமீபத்தில், ஓவியாவின் டீப் ஃபேக் வீடியோவுக்கும் இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்ட நிலையில், அடுத்த பலியாக பிரக்யா நாக்ரா சிக்கியுள்ளார்.

pragya nagra heroine

ஆபாச ஏஐ எடிட்: இது ஒரு கெட்டக் கனவாக இருக்கக் கூடாதா என நினைக்கிறேன். அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது. இது மோசமான ஆபாச ஏஐ எடிட் தான். டெக்னாலஜி பெண்களின் வாழ்க்கையை இப்படி சீரழிக்கக் கூடாது. வக்கிரம் பிடித்து இப்படி டீப் ஃபேக் வீடியோக்களை ரெடி செய்து வெளியிடும் கயவர்கள் மற்றும் அதை டிரெண்ட் செய்யும் கெட்ட புத்திக் கொண்ட நபர்களால் தான் பல பெண்கள் கஷ்டப்படுகின்றனர். என்னைப் போல மற்ற பெண்கள் யாரும் இதுபோன்ற ஏஐ எடிட் ஆபாச வீடியோக்களால் பாதிக்கக் கூடாத அளவுக்கு சைபர் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட என்னை நம்பி அது நானாக இருக்காது என்றும் ஸ்டே ஸ்ட்ராங் எனக் கூறும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரக்யா நாக்ரா பதிவிட்டுள்ளார்.

pragya nagra heroine

ரசிகர்கள் ஆறுதல்: வரலாறு முக்கியம், , N4, நதிகளில் சுந்தரி யமுனா, இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான லக்கம் என பல படங்களில் நடித்து வரும் 25 வயதே ஆன இளம் நடிகை பிரக்யா நாக்ராவின் ஆபாச வீடியோ என சிலர் பரப்பிவிட்ட வீடியோவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டு ட்விட்டரில் அதிக வியூஸ்களை அள்ளி சம்பாதிக்க வேண்டும் என பல இளைஞர்கள் கடந்த 2 நாட்களாக டிரெண்ட் செய்து வந்த நிலையில், பிரக்யா நாக்ராவின் விளக்கத்திற்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் வலிமையுடன் இருங்கள் என்றும் காவல்துறை மற்றும் அரசாங்கம் இதை உடனடியாக தடுக்க வழி வகை செய்ய வேண்டும் என்றும் சோஷியல் மீடியாவில் ஆபாச வீடியோக்கள் உலா வராமல் தடுக்க அந்த அந்த நிறுவனங்கள் ஃபில்டர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கொந்தளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X