தமிழ் நடிகர்களில் ஒரு ஆண் மகன்.. கள்ளக்குறிச்சி சம்பவம்.. விஜய்யை பாராட்டிய பிரசாந்த் ரங்கசாமி!
சென்னை: ப்ளூ சட்டை மாறனை தொடர்ந்து நடிகர் விஜய்யை மற்றொரு தமிழ் சினிமா விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி பாராட்டியுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 36 பேர் பலியான நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரசுக்கு எதிராக பல்வேறு கட்சியினரும் சினிமா பிரபலங்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கள்ளச்சாராயத்தை அடியோடு அரசு பல்வேறு இடங்களில் ஒழித்த நிலையிலும், இன்னமும் சில கிராமங்களில் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கப்படும் மோசமான சூழல் நிலவி வருகிறது. அப்பாவை இழந்து அழுது புலம்பும் குழந்தைகளின் வீடியோக்கள் வெளியாகி நெஞ்சை கனக்கச் செய்கிறது.

36 பேர் விஷ சாராயத்தை குடித்து உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக தைரியமாக விஜய் குரல் கொடுத்த நிலையில், அவரை விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி பாராட்டியுள்ளார்.
விஜய் அறிக்கை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் இன்னமும் சினிமா சூட்டிங்கில் பிசியாக உள்ள நிலையில், முழு நேர அரசியல்வாதியாக மாறவில்லை. ஆனாலும், முக்கியமான தருணங்களில் தனது குரலை கொடுக்காமல் இருந்தால் நல்லா இருக்காது என நினைத்த நடிகர் விஜய் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள விஜய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 100க்கும் மேற்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்தியுள்ளார். மேலும், அரசின் மெத்தன போக்கு தான் இப்படியொரு சம்பவம் அரங்கேற காரணம் என்றும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பிரசாந்த் ரங்கசாமி பாராட்டு: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக எளிதாக 200 தொகுதிகளில் வெற்றிப் பெறும் என சமீபத்தில் ட்வீட் ஒன்றை போட்டு திமுகவுக்கு ஆதரவாக பேசியிருந்த பிரசாந்த் ரங்கசாமி, தற்போது நடிகர் விஜய்க்கு ஆதரவாக, "தமிழ் நடிகர்களில் ஒரு ஆண் மகன்! வாழ்க அண்ணா!" என ட்வீட் போட்டு விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சினிமா விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி எஃப்ஐஆர், டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பா. ரஞ்சித் கண்டனம்: "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்! @CMOTamilnadu" என பா. ரஞ்சித்தும் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.



Click it and Unblock the Notifications











