வரிசையாக இரட்டை ஜாக்பாட் அடிக்கும் பிரஜின்.. தொடர்ந்து நீடிக்க வேண்டுமே!

சென்னை: 'காதலிக்க நேரமில்லை’ சீரியல் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரஜின். இன்றும் அந்த சீரியல் பாடலை சிலர் ரிங் டோனாக வைத்திருக்கின்றனர்.

சிறிது காலம் சின்னத்திரையை விட்டு சற்று விலகி இருந்த பிரஜின் மீண்டும் விஜய் டிவியின் 'சின்னத்தம்பி’ சீரியல் மூலம் மறு பிரவேசம் கொடுத்தார். நல்ல வரவேற்பை பெற்ற அந்த சீரியல் சமீபத்தில் நிறைவுற்றது.

prajin double jackpot

இதனிடையே நிவீன் பாலி மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான லவ் ஆக்சன் டிராமா மலையாள படத்தில் பிரஜின் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த கதா பாத்திரத்தை எவ்வாறு பெற்றார் என்பதைப் பற்றி பேசுகையில், "நடிகர் அஜு வர்கீஸ் எனது மலையாள படங்களில் ஒன்றைப் பார்த்து, இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசனுக்கு எனது பெயரை பரிந்துரைத்தார். படத்தின் நிவினும் நானும் நிறைய காம்பினேஷன் காட்சிகளைக் கொண்டிருந்தோம், மேலும் சண்டைக் காட்சிகளையும் உள்ளடக்கியது. நிவின் மற்றும் நயன்தாரா போன்ற நடிகர்களோடு பணியாற்றியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நடிகர் அஜு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பிரஜனுக்கு பரிசளித்துள்ளார்.

தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிப்பது குறித்து, "நான் எப்போதுமே எதிர்மறை வேடங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை கொண்டிருந்தேன். உண்மையில், வில்லன் வேடத்தில் நடிப்பது இதுவே முதல் முறை" என்று அவர் கூறுகிறார். 'சின்னதம்பி’ சமீபத்தில் முடிவுக்கு வந்தது, பிக் பாஸ் தமிழ் 3 நிறைவடைந்த பின் புதிய சீரியல் ஒன்றை பிரஜின் தொடங்க உள்ளார். இந்த படத்தின் மூலம், மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார்.

பிரஜின் மற்றும் சாண்டரா தம்பதியினர் திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பின்னர் தற்போது தான் இரட்டை பெண் குழந்தைகளுக்கு பெற்றோராகினர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆகவே பிரஜினுக்கு இது இரட்டை ஜாக்பாட் அடிக்கும் காலம் போல!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X