2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட 15 டிவி நடிகர்கள்: 'சின்னத் தம்பி' தான் ஃபர்ஸ்ட்
சென்னை: 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட தொலைக்காட்சி நடிகர் பிரஜின்.
இல்லத்தரசிகளால் டிவி சீரியல்கள் பார்க்காமல் இருக்க முடியவில்லை. டிவி சீரியல் பார்க்கும் போது சோறு கேட்டால் விளம்பரம் போடும் போது தான் கொடுக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அனைவரையும் கவர்ந்த தொலைக்காட்சி பிரபலங்கள் யார் என்று தெரிய வந்துள்ளது.

பிரஜின்
2017ம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட 15 ஆண்களின் பட்டியலை சென்னை டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் சின்னத்தம்பி புகழ் பிரஜின் தான் முதலிடத்தை பிடித்துள்ளார்.

செம மார்னிங்
மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கிய கதிரவனுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. அவர் டைம் பாஸ், ஃப்ரீயா விடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். தற்போது செம மார்னிங், டாப் 5 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பையனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

அமித் பார்கவ்
கல்யாணம் முதல் காதல் வரை புகழ் அமித் பார்கவுக்கு சென்னை டைம்ஸ் பட்டியலில் 3வது இடம் கிடைத்துள்ளது. அவர் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து வருகிறார்.

ரக்ஷன்
சென்னை டைம்ஸ் பட்டியலில் 4வது இடத்தில் மிர்ச்சி விஜய்யும், 5வது இடத்தில் ரக்ஷனும் உள்ளனர். ஆர்ஜேவாக பணியை துவங்கிய விஜய் டைம் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கலக்கப் போவது யாரு சீசன் 5 மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ரக்ஷன். துல்கர் சல்மான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ராகுல் ரவி
சென்னை டைம்ஸ் பட்டியலில் அசார், ராகுல் ரவி, விக்னேஷ் கார்த்திக், ரியோ ராஜ், சஞ்சீவ், தீபக் தினகர், பப்பு, சுரேஷ், கார்த்திக் ராஜ், மாகாபா ஆனந்த் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











