தன் இரட்டை குழந்தைகளின் போட்டோவை வெளியிட்ட 'சின்னத்தம்பி' பிரஜின்

By Siva

சென்னை: சின்னத்தம்பி சீரியல் புகழ் பிரஜின் தனது இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சின்னத்தம்பி தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் பிரஜின். இது தவிர்த்து அவ்வப்போது படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் மனைவியும், நடிகையுமான சாண்ட்ரா கர்ப்பமாக இருந்தார்.

Prajin posts picture of twins on instagram

அவர் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து பிரஜின் தனது செல்லக்குட்டிகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். முகத்தை காட்டாமல் கால்களை மட்டும் புகைப்படம் எடுத்து போஸ்ட் செய்துள்ளார்.

பிரபலங்கள் தங்கள் குழந்தைகளின் கால்கள் அல்லது கைவிரல்களை மட்டும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. பிரஜின் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கெரியரை துவங்கிய பிரஜின் கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். இருப்பினும் சின்னத்திரையில் அவர் மிகவும் பிரபலமானவர். அவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள் கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X