பாவம் அவங்க ரெண்டு பேருக்கும் என்ன கஷ்டமோ.. ஐயா துரைக்கு ஆப்பு வைத்த கருப்புசாமி பிரகாஷ் ராஜ்!
சென்னை: சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் அவர்கள் குறித்த விமர்சனத்தை வெளிப்படையாக பிரகாஷ் ராஜ் வைத்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாஜக கட்சிக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரங்களை செய்து வருகிறார் பிரகாஷ் ராஜ். பாஜக கட்சி நம் நாட்டுக்கே பெரிய சாபக்கேடு என்றும் மோடி சரியான தலைவர் இல்லை என்றும் கலைஞர் இருந்திருந்தால் அண்ணாமலை எல்லாம் முளைத்திருக்க மாட்டார்கள் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் அரசியல் விவாதங்கள் சூடு பிடித்துள்ளன.
பாஜகவில் இணைந்த சரத்குமார்: சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்து பல வருடங்களாக நடத்தி வரும் சரத்குமார் இந்த முறை பாஜகவில் இணைந்து அரசியல் செய்து வருகிறார். மேலும், நடிகை ராதிகா சரத்குமார் பாஜக சார்பில் விருதுநகர் வேட்பாளராக போட்டியிடுகிறார். நேற்று மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தை சரத்குமார் ஓட்டிக் கொண்டு செல்ல அவரது பின்னால் ராதிகா சரத்குமார் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் கும்பாபிஷேகம்: பாஜக-வில் இணைவதற்கு முன்னதாக தங்களது சொந்த ஊரில் கோவில் கும்பாபிஷேகத்தில் ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து சரத்குமார் நடத்தியிருந்தார். எல்லாம் அரசியல் ஆதாயத்திற்காக அவர் செய்ததுதான் என கடும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன. தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலரும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு எதிரான கண்டனங்களும் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
பிரகாஷ் ராஜ் தாக்கு: சமீபத்தில், செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் ரீதியான பல கருத்துக்களை முன்வைத்து வந்தார். கருணாநிதி இருந்திருந்தால் ஜஸ்ட் ஆஸ்கிங் என்பதை நான் ஆரம்பித்து இருக்க மாட்டேன். அவருக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருந்தது. சரியான விஷயங்களை செய்து வந்தார். ஆனால், தற்போது நிலைமை அப்படியில்லை என்றார். மேலும், பாஜக கட்சியில் கணவனும் மனைவியும் இணைஞ்சிருக்காங்க, பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ என பிரகாஷ் ராஜ் பேசியிருப்பது பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

ஐயா முதல் வாரிசு வரை: ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தில் சரத்குமாருக்கு எதிராக கருப்பசாமி கதாபாத்திரத்தில் தனது வில்லத்தனத்தை பிரகாஷ்ராஜ் காட்டி இருப்பார். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் சரத்குமார் மற்றும் அவரது வாரிசுகளான ஸ்ரீகாந்த், ஷியாம் மற்றும் விஜய்யை காலி செய்ய பல திட்டங்களை போடுவது போல நடித்திருப்பார். சினிமாவில் தான் வில்லன். நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கருத்து ரீதியாக சரத்குமார் செய்தது பிரகாஷ் ராஜுக்கு பிடிக்கவில்லை என்பது அவரது கருத்தின் மூலம் தெளிவாக தெரிகிறது என பலரும் கூறி வருகின்றனர்.
சரத்குமார் ட்வீட்: "உங்களுக்காக யார் செயல்படுவார்கள் என்பதை சிந்தித்து நிர்வாக திறமைவாய்ந்த, உங்களுக்காக திட்டங்களை செயல்படுத்தக்கூடிய பெண் வேட்பாளர் ராதிகாவுக்கு விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மக்கள் வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்யுங்கள்" என தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது மனைவிக்காக சரத்குமார் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரகாஷ் ராஜின் கருத்துக்கு விரைவில் பதிலடி கொடுப்பாரா? அல்லது கடந்து செல்வாரா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











