பிரகாஷ் ராஜின் முதல் மனைவி 2ஆவது திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா?.. இப்படியும் ஒரு காரணமா

சென்னை: பிரகாஷ் ராஜ் இந்திய அளவில் பிரபலமான நடிகர். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து பாலசந்தரின் கண்களில் பட்டு சினிமாவுக்குள் நுழைந்தவர். தனது ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் வேரியேஷன் காண்பிக்கும் மிகச்சில சிறந்த நடிகர்களில் பிரகாஷ் ராஜும் ஒருவர். அவர் கடைசியாக அவர் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவரது முதல் மனைவி லலிதா குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துவருபவர் பிரகாஷ் ராஜ். வில்லன் கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில் தனது முத்திரையை அவர் பதித்துவிடுவார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ் ராஜ் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கினார். கே.பாலசந்தர் ஒரு விழாவிற்கு சென்றிருந்தபோது பிரகாஷ் ராஜின் நடிப்பைப் பார்த்து ஈர்க்கப்பட்டார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் தான் இயக்கிய டூயட் படத்தின் பிரகாஷ் ராஜை அறிமுகப்படுத்தினார் கே.பாலசந்தர்.

Prakash Raj First Wife Lalitha Kumari Old Interview Gone Trending on Social Media

அடுத்தடுத்த வாய்ப்புகள்: முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் திறமையை நிரூபித்த பிரகாஷ் ராஜுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக வசந்த் இயக்கிய ஆசை படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேபோல் அப்பு படத்தில் திருநங்கையாக நடித்து நடிப்பில் அசுர பாய்ச்சல் செய்திருப்பார். அதனையடுத்து பல படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் பல மொழிகளில் தடம் பதித்தார்.

திருமணம்: இப்போதும் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் பல படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே அவர் 1994ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்தார்கள். அவர்களில் மகன் சித்து உயிரிழந்துவிட்டார். மகனின் உயிரிழப்பு லலிதா - பிரகாஷ் ராஜ் தம்பதியை ரொம்பவே பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இருவரும் அந்த துக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தார்கள்.

இரண்டாவது திருமணம்: சூழல் இப்படி இருக்க சுமூகமாக போய்க்கொண்டிருந்த லலிதா - பிரகாஷ் ராஜ் திருமண வாழ்க்கை திடீரென விவாகரத்தில் வந்து நின்றது. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. கடந்த 2009ஆம் ஆண்டு லலிதா குமாரியை பிரகாஷ் ராஜ் விவாகரத்து செய்துவிட்டார். அதற்கு பிறகு கோரியோகிராஃபர் போனி வர்மாவை 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கும் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோ இரண்டாவது திருமணம்: விவாகரத்து செய்த பிறகு பிரகாஷ் ராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் லலிதா குமாரி செய்துகொள்ளவில்லை. எதற்காக அவர் 2ஆவது திருமணம் செய்துகொள்ளவில்லை என்று ரசிகர்கள் கேட்டுவந்தனர். இந்தச் சூழலில் லலிதா குமாரியின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

லலிதாவின் பேட்டி: அந்தப் பேட்டியில் இரண்டாவது திருமணம் ஏன் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் என்னுடைய முதல் திருமண வாழ்க்கையில் உண்மையாகத்தான் இருந்தேன். விவாகரத்து நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை சிறப்பாகவே எனக்கு அமைந்திருந்தது. அதைத் தவிர்த்து வேறு ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X