twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிறந்த நாள் அதுவுமா.. பிரகாஷ் ராஜ் என்ன செஞ்சிருக்காருன்னு பாருங்க.. நீங்களும் எதையாவது செய்யலாமே?

    |

    சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜின் 55வது பிறந்த நாள் இன்று கொண்டாடப் படுகிறது.

    தென்னிந்திய மொழிப் படங்கள் மட்டுமின்றி, இந்தி படங்களிலும் தனது முத்திரையை நடிகர் பிரகாஷ் ராஜ் பதித்துள்ளார்.

    தனது பிறந்த நாளான இன்று, கொரோனா வைரஸ் காரணமாக பரிதவிக்கும் 11 பேருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் உதவி செய்துள்ளார்.சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜின் 55வது பிறந்த நாள் இன்று கொண்டாடப் படுகிறது.

    தென்னிந்திய மொழிப் படங்கள் மட்டுமின்றி, இந்தி படங்களிலும் தனது முத்திரையை நடிகர் பிரகாஷ் ராஜ் பதித்துள்ளார்.

    தனது பிறந்த நாளான இன்று, கொரோனா வைரஸ் காரணமாக பரிதவிக்கும் 11 பேருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் உதவி செய்துள்ளார்.

    சினிமாவில்

    சினிமாவில்

    பெங்களூரை சேர்ந்த பிரகாஷ் ராஜ், கன்னட டிவி சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வந்தார். பாலசந்தரின் டூயட் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பிரகாஷ் ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தும் டப்பிங் பேசியும் உள்ளார்.

    வில்லன் நடிகர்

    வில்லன் நடிகர்

    ஹாய் செல்லம் என கில்லியில் முத்துப்பாண்டியாக நடித்து மிரட்டிய வில்லன் பிரகாஷ் ராஜை தமிழ் சினிமா எப்போதுமே மறக்காது. கல்கி, ஆசை, போக்கிரி, வில்லு, வானவில், அந்நியன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., என தமிழில் பல படங்களிலும், அதே போல தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வில்லனாக பிரகாஷ் ராஜ் பின்னி எடுத்துள்ளார்.

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகர்

    பிரகாஷ் ராஜ் வில்லன் நடிகரையும் தாண்டி தான் ஒரு சிறந்த நடிகர் என பல படங்களில் தன்னை நிரூபித்துள்ளார். 2000 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ள பிரகாஷ் ராஜ், இருவர், காஞ்சிவரம், அப்பு, அபியும் நானும், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

    FEFSI தொழிலாளர்களுக்கு

    FEFSI தொழிலாளர்களுக்கு

    இந்தியா முழுவதும் சிறந்த நடிகராக அறியப்படும் நடிகர் பிரகாஷ் ராஜ், சமூக நலனில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், வருமானம் பாதித்து கஷ்டப்படும் FEFSI தொழிலாளர்களுக்கு தலா 25 கிலோ என்ற வகையில் 150 அரிசி மூட்டைகளை வழங்கியிருந்தார்.

    பிறந்தநாள் அதுவுமா

    இந்நிலையில், தனது 55வது பிறந்த நாளை உபயோகம் உள்ளதாக கொண்டாடியுள்ளார் பிரகாஷ் ராஜ். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீடுகள் இன்றி தவித்து வந்த 11 பேருக்கு, பாண்டிச்சேரியில் உள்ள தனது தோட்டத்தில், அவர்களுக்கான தங்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். வீடுகள் இல்லாதவர்கள் எப்படி வீட்டுக்குள் இருப்பார்கள் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், பிரகாஷ் ராஜின் இந்த செயல் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

    அனைவரது கடமை

    அனைவரது கடமை

    இதுபோன்ற கஷ்ட காலங்களில், அரசு தான் எல்லா விஷயத்தையும் செய்ய வேண்டும் என நினைக்காமல், உங்களால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை பிறருக்கு செய்து உதவுங்கள், இது அனைவரது கடமை என்றும், ஒவ்வொரு பிரபலங்களும், பணம் படைத்தவர்களும், இதுபோன்று வீடுகள் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யலாமே என்றும் கேட்டுள்ளார்.

    English summary
    Prakash Raj helped 11 homeless people to made shelter for them on his birthday date. And he asked others to do some help on the corona crisis days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X