டைவர்ஸ் ஆனாலும் முன்னாள் மனைவிக்கு உதவிய நடிகர் பிரகாஷ்ராஜ்!

By Vignesh Selvaraj

Recommended Video

முன்னாள் மனைவிக்கு வாழ்நாள் முழுக்க உதவுமாறு ஒரு காரியம் செய்த பிரகாஷ்ராஜ்..!!

சென்னை : நடிகர்களில் பல பிரபலங்கள் முதல் திருமணத்தை முடித்துக் கொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

நடிகர் பிரகாஷ் ராஜும் தன்னுடைய முதல் மனைவி லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்டு போனி வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், லலிதா குமாரி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பில்லாமல் இருப்பதை அறிந்த பிரகாஷ் ராஜ் அவருக்கு உதவி செய்திருக்கிறார்.

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்

பொதுவாக ஒரு தம்பதியினர் விவாகரத்து பெற்றுவிட்டால் பின்னர் ஒருவரை ஒருவர் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. ஆனால் நடிகர் பிரகாஷ்ராஜ் டைவர்ஸ் ஆன தனது மனைவிக்கு தயவு காட்டி உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரகாஷ்ராஜ் - லலிதா குமாரி

பிரகாஷ்ராஜ் - லலிதா குமாரி

பிரகாஷ்ராஜ் லலிதகுமாரி தம்பதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பின்னர் பிரகாஷ்ராஜ், பாலிவுட் நடிகை போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

நிகழ்ச்சி நடத்த முடிவு

நிகழ்ச்சி நடத்த முடிவு

இந்த நிலையில் லலிதாகுமாரி கொஞ்சம் பொருளாதார சிக்கலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. லலிதா குமாரி படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு பணத்திற்காக நிகழ்ச்சிகள் செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனால் முதலீடு எதுவும் இல்லாமல் அவர் திணறியிருக்கிறார்.

உதவி செய்த பிரகாஷ் ராஜ்

உதவி செய்த பிரகாஷ் ராஜ்

இதனை அறிந்த பிரகாஷ்ராஜ், விரைவில் தமிழில் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் தயாரிக்க லலிதாகுமாரிக்கு நிதியுதவியும், ஸ்லாட்டும் ஒதுக்க பரிந்துரை செய்து வாய்ப்பு கிடைக்க உதவியுள்ளார். டைவர்ஸ் ஆனாலும் அவருடைய நிரந்தர வருமானத்திற்கு உதவி செய்த பிரகாஷ்ராஜை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

நல்ல உறவைப் பேணும் பிரகாஷ்ராஜ்

நல்ல உறவைப் பேணும் பிரகாஷ்ராஜ்

சில மாதங்களுக்கு முன்பு லலிதாகுமாரியின் சகோதரர் மகள் காணாமல் போனதால் குடும்பத்தினர் தேடி வந்தனர். அப்போதும், பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் தகவல்களைப் பகிர்ந்து தேடுதலில் உதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X