மணிரத்னம் புதிய படம் தொடக்கம்... பிரகாஷ் ராஜும் இணைந்தார்!
‘கடல்' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
இந்தப் படத்தில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேர்வு செய்யப்பட்டு கடைசியாக நித்யா மேனன் தேர்வாகியுள்ளார்.
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இவர் மணிரத்னம் படத்தில் நடிப்பது இது நான்காவது முறையாகும்.
மணிரத்னம் இயக்கத்தில் ‘பாம்பாய்', ‘இருவர்', ‘கன்னத்தில் முத்தமிட்டால்' ஆகிய படங்களில் ஏற்கெனவே நடித்துள்ளார்.
இது குறித்து பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சூப்பர் சூப்பர், மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். எனது கேரக்டரையும், கதையையும் மணிரத்னம் விளக்கிச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











