ஜெய்பீம், அண்ணாத்த, எனிமி.. அட தீபாவளி ரிலீஸ் 3 படத்துலேயும் பிரகாஷ் ராஜ் இருக்காரு கவனிச்சீங்களா?

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் புதிய படங்களில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கன்னட தொலைக்காட்சி தொடர்கள், நாடகங்கள் மற்றும் கன்னட சினிமாவில் கலக்கி வந்த பிரகாஷ் ராஜ் தமிழில் டூயட் படத்தில் மூலம் அறிமுகமானார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளார்.

பிரகாஷ் ராஜ் அறிமுகம்

பிரகாஷ் ராஜ் அறிமுகம்

1988ம் மிதிலேயே சீதேயரு எனும் கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். கன்னட படங்களில் நடித்து வந்த பிரகாஷ் ராஜ் 1993ம் ஆண்டு டிராபிக்கல் ஹீட் எனும் ஆங்கில படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார். தமிழில் இயக்குநர் பாலசந்தர் மூலமாக டூயட் படத்தில் 1994ம் ஆண்டு அறிமுகமானார். அதே ஆண்டு கன்னடத்தில் லாக்டப் டெத் எனும் படத்திலும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

கல்கி, இருவர் என அப்போதே தனது ஆளுமையை நிலைநாட்டிய பிரகாஷ் ராஜ் கில்லி படத்தில் செல்லமே என சொல்லிக் கொண்டு திரிஷாவை துரத்தும் முத்துப்பாண்டியாக வில்லனாக மிரட்டினார். சந்தோஷ் சுப்பிரமணியம், அபியும் நானும் உள்ளிட்ட படங்களை பார்த்தவர்கள் இப்படியொரு அப்பா நமக்கு கிடைக்க மாட்டாரா என ஏங்கும் அளவுக்கு நடித்திருந்தார். ஹீரோ, வில்லன், அப்பா, குணசித்ர நடிகர் என எந்த வேடம் கொடுக்கப்பட்டாலும் அதில் தனது தனி முத்திரையை பதித்து விடுவது பிரகாஷ் ராஜின் வழக்கம்.

தீபாவளி ரிலீஸ் படங்களில்

தீபாவளி ரிலீஸ் படங்களில்

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பிசியாகி இருந்த பிரகாஷ் ராஜ் சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் வரிசையாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அசுரன் படத்தில் வழக்கறிஞராக நடித்து அசத்திய பிரகாஷ் ராஜ் இந்த தீபாவளிக்கு வெளியாகும் 3 படங்களில் நடித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஜெய்பீம் படத்தில்

ஜெய்பீம் படத்தில்

இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்து நவம்பர் 2ம் தேதி வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து சூர்யாவுக்கு அடுத்து படத்தில் இன்னொரு நாயகனாகவே ஜொலிக்கிறார் பிரகாஷ் ராஜ்.

அண்ணாத்த படத்தில் வில்லன்

அண்ணாத்த படத்தில் வில்லன்

படையப்பா படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் உடன் பிரகாஷ் ராஜ் அண்ணாத்த படத்தில் இணைந்து நடித்துள்ளார். டிரைலரில் பிரகாஷ் ராஜ் லோக்கல் வில்லனாக நடித்துள்ளதை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த தீபாவளி நிச்சயம் பிரகாஷ் ராஜுக்கு பிரகாசமான தீபாவளி தான்.

எனிமியிலும் இருக்காரு

எனிமியிலும் இருக்காரு

ஜெய் பீம் மற்றும் அண்ணாத்த படங்களில் மட்டுமின்றி விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகவுள்ள எனிமி படத்திலும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வருட தீபாவளி ரிலீஸ் படங்களில் எம்ஜிஆர் மகன் மற்றும் இட்டர்னல்ஸ் படத்தை தவிர அனைத்திலும் பிரகாஷ் ராஜ் நடித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கேஜிஎஃப் 2 படத்திலும்

கேஜிஎஃப் 2 படத்திலும்

வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள கேஜிஎஃப் 2 படத்திலும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரம்மாண்ட படங்கள் அனைத்திலும் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் கமீட் ஆகி வருவது அவரது திறமையான நடிப்புக்கு கிடைத்த வெற்றி என்றே ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பொன்னியின் செல்வனிலும்

பொன்னியின் செல்வனிலும்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழ மகாராஜாவாக நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி பொங்கலுக்கு வெளியாகும் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, ஷங்கர் பொண்ணு அறிமுகமாகவும் விருமன் மற்றும் அல்லு அர்ஜுனின் புஷ்பா என பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி வரும் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X