Just In
- 20 min ago
வெளியே வந்தும் சர்ச்சை.. குரைக்கும் நாய் கடிக்காது.. ஜோ மைக்கேலுடன் செம மல்லுக்கட்டில் பாலாஜி!
- 49 min ago
தொப்புள் கொடியை போலவே வலிமையானது தேசிய கொடி.. புலிப்பெண்ணாக மாறிய ’பிகில்’ பாண்டியம்மா!
- 2 hrs ago
பிரியா ஆனந்தின் க்யூட்டான படுக்கையறை செல்ஃபி.. திணறும் இணையதளம்!
- 5 hrs ago
ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்
- Sports
இந்திய இளம் திறமைகளை சிறப்பாக மேம்படுத்தியிருக்காரு டிராவிட்... ரஹானே பாராட்டு
- Automobiles
வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மோடி அரசு அதிரடி திட்டம்... யாரெல்லாம் கட்டணும்? எவ்வளவு கட்டணும் தெரியுமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உன் சமையலறையில்.. கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றி..பிரகாஷ் ராஜ் மகிழ்ச்சி!
பிரகாஷ் ராஜ் தயாரித்து, இயக்கி, நடித்த மும்மொழிப் படமான உன் சமையலறையில் தமிழ், தெலுங்கில் சுமாராகப் போனாலும், கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
பிரகாஷ் ராஜுக்கு இது பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.

மலையாளத்தில் சால் அன்ட் பெப்பர் என்ற பெயரில் வெளியான படத்தின் உரிமையைப் பெற்ற பிரகாஷ் ராஜ், அதனை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட்டார். மூன்று மொழிகளிலும் இளையராஜா இசையமைத்திருந்தார்.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு உலவுச்சாறு பிரியாணி என்று பெயரிட்டிருந்தார். கன்னடத்தில் ஒக்கரானே என்ற தலைப்பில் வெளியானது.
தமிழிலும் தெலுங்கிலும் படத்துக்கு சுமாரான வரவேற்புதான் கிடைத்தது. படம் ஆபாசமின்றி சிறப்பாகவே இருந்தாலும், படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் குறைவாக இருந்ததை விமர்சனங்கள் சுட்டிக் காட்டின. தெலுங்கிலும் இதே நிலைதான்.
ஆனால் கன்னடத்தில் இந்தப் படத்துக்கு அபாரமான வெற்றி கிடைத்துள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில், மல்டிப்ளெக்ஸ்களில் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், "ஆமாம்... இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் சுமாராகத்தான் போகிறது. இந்த வாரம் பிக்கப் ஆகும் என நம்புகிறேன். ஆனால் கன்னடத்தில் பிரமாதமான வெற்றி கிடைத்துள்ளது. குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். இத்தனைக்கும் படம் வெளியாகும்போது பெரிய பப்ளிசிட்டி கூட இல்லை..," என்றார்.
கன்னடத்தில் இந்தப் படத்தை நடிகர் தர்ஷனின் சகோதரர் தினகர் வெளியிட்டிருந்தார்.