தமிழ்நாடு ரசிகர் மயமாகி விட்டது.. விஜய்யின் வெற்றியை வாழ்த்தோடு விளாசிய ஜனநாயகன் பட நடிகர்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 2026 வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில் தவெக தலைமையிலான ஆட்சிதான் தமிழ்நாட்டில் என்று கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. பலரும் தவெகவுக்கும் விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தவரும், ஜன நாயகன் படத்தில் நடித்தவருமான நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Prakash Raj s Sharp Take on TN Results Fan Culture Rising Politics Not Dead Sparks Debate

அதாவது, " வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மாயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Prakash Raj s Sharp Take on TN Results Fan Culture Rising Politics Not Dead Sparks Debate

மேலும், இவரது பதிவுக்கு ரசிகர்கள் பலரும் நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செக்‌ஷனில் பதில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதாவது, " இனிமேலாவது திருந்துங்க. மக்களை ஏளனமாக பேசியதற்கு தான் உங்கள் கட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்கள். இனிமேலாவது மக்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்" என்று ஒரு தவெக ஆதரவாளரும், "அறிஞர் அண்ணா சிறிது காலம் தான் ஆட்சி செய்தார் ஆனால் இன்றளவும் நிலைத்திருக்கும் தலைவர் அண்ணா அந்த வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் நிலைத்து நிற்பார்" என்று ஒரு திமுக ஆதரவாளரும் கமெண்ட் போட்டுள்ளனர்.

Read more about: mk stalin dmk prakash raj politics
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X