twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேவலமாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு - பா.ஜ.க எம்.பி-க்கு பிரகாஷ்ராஜ் பதிலடி!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    கேவலமாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு-பா.ஜ.க எம்.பி-க்கு பிரகாஷ்ராஜ் பதிலடி- வீடியோ

    சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக அரசுக்கு எதிரான கருத்துக்களைப் பேசியும், எழுதியும் வருகிறார். அதனால் ஆளும் பா.ஜ.க-வினர் அவரை அதிகமாக விமர்சித்து வருகின்றனர்.

    பிரகாஷ் ராஜின் தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டிக்காத பிரதமரை, என்னை விட சிறந்த நடிகர் என்று விமர்சித்தார் பிரகாஷ்ராஜ்.

    சமீபத்தில், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பால் பயன்பெற்றது பணக்காரார்கள்தான் என்றார். இதனால் பா.ஜ.க.வினர் பிரகாஷ் ராஜை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

    பிரகாஷ் ராஜுக்கு எதிர்ப்பு

    பிரகாஷ் ராஜுக்கு எதிர்ப்பு

    பிரகாஷ்ராஜின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் அவருக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹா 'பிரகாஷ்ராஜ் தன் மகன் இறந்த துக்கத்திலும் மனைவியை விட்டுவிட்டு டான்ஸ் ஆடுபவரோடு குடும்பம் நடத்தியவர்' என்று கூறியிருந்தார்.

    பிரகாஷ்ராஜ் கோபம்

    பிரகாஷ்ராஜ் கோபம்

    பா.ஜ.க எம்.பி தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை விமர்சித்தது பிரகாஷ்ராஜை கோபப்படுத்தியது. 'தர்க்க ரீதியாக எனக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கிறார்கள்' என்றார். மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    மோசமாகப் பதிவிடுகிறார்

    மோசமாகப் பதிவிடுகிறார்

    இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது, மத்திய அரசை நான் விமர்சிப்பது பொதுநலம் விரும்பும் அரசியல் ரீதியானது. ஆனால் பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா என்னை தனிப்பட்ட முறையில் ஆபாசமாக விமர்சித்து வருகிறார். என் மகன் உயிரிழந்ததையும், என் தனிப்பட்ட வாழ்க்கையையும் மோசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்.

    வக்கீல் நோட்டீஸ்

    வக்கீல் நோட்டீஸ்

    ஒரு பார்லிமென்ட் உறுப்பினர் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளலாமா? அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். இதற்கு 10 நாட்களுக்குள் அவர் பதில் அளிக்காவிட்டாலோ, மன்னிப்பு கேட்காவிட்டாலோ அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வேன் என்கிறார் பிரகாஷ்ராஜ்.

    கூச்சப்படாம கேளுங்க

    பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா பிரகாஷ்ராஜை தனிப்பட்ட முறையில் தாக்கிய ட்வீட்டை நீக்கியிருக்கிறார். அது தொடர்பாக, 'நீங்கள் ட்வீட்டை வேண்டுமானால் நீக்கலாம். மக்கள் மனதில் இருந்து அதை நீக்க முடியாது' என ட்வீட் செய்துள்ளார். 'அந்த ட்வீட்டுகள் எதிர்காலத்தில் உங்களுக்கு தேவைப்பட்டால் கூச்சப்படாமல் என்னை தொடர்பு கொள்ளலாம்' எனவும் நக்கலாக பதிவு செய்துள்ளார்.

    English summary
    Prakashraj has recently spoken and wrote opinions against the government. Thus, the BJP had fought against Prakash Raj. Mysore MP Pratap Simha tweeted about prakash Raj's personal life. Now, Prakash Raj sent notice to Mysore MP Pratap Simha for his tweet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X