நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.. பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த கிச்சா சுதீப்.. பதறிப்போன பிரகாஷ் ராஜ்!
பெங்களூரு: பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக நடிகர் கிச்சா சுதீப் அறிவித்ததை அறிந்த நடிகர் பிரகாஷ் ராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு அளிப்பதாக நடிகர் கிச்சா சுதீப் பகிரங்கமாக தெரிவித்து இருப்பது கர்நாடக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவில் நடிகர் கிச்சா சுதீப் இணையப் போவதாக செய்திகள் பரவிய நிலையில், அந்த செய்தியை டேக் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ் இது முற்றிலும் பொய்யான செய்தி என நம்புகிறேன். நண்பர் கிச்சா சுதீப் ரொம்பவே புத்திசாஇ ஒரு போதும் இது போன்ற போலியான வலை விரிப்புக்கு இரையாக மாட்டார் என ட்வீட் போட்டிருந்தார்.
பிரகாஷ் ராஜ் வேதனை
ஆனால், நடிகர் கிச்சா சுதீப் அதிகாரப்பூர்வமாக தான் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கப் போகிறேன் என்றும் வரப் போகும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளித்து பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கூறிய நிலையில், அதை அறிந்த நடிகர் பிரகாஷ் ராஜ் "தான் ரொம்பவே அதிர்ச்சியடைந்துள்ளேன் என்றும் என் மனம் ரொம்பவே வலியால் துடிக்கிறது" என்றும் பேசி உள்ளார்.
கன்னட நடிகர்களான பிரகாஷ் ராஜ் மற்றும் கிச்சா சுதீப் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நடித்து வருகின்றனர். மேலும், பல காலமாக நண்பர்களாக இருந்து வந்தனர். கிச்சா சுதீப் அஜய் தேவ்கனுக்கு எதிராக இந்தி திணிப்புக்கு எதிராக பேசிய கருத்துக்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பாராட்டுக்களை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அப்படியே அந்தர் பல்டி அடித்து பாஜகவில் இப்படி தன்னை இணைத்துக் கொண்டாரே கிச்சா சுதீப் என்பதை அறிந்த நடிகர் பிரகாஷ் ராஜ் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார்.
அந்தரங்க வீடியோ
கிச்சா சுதீப் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவரது அந்தரங்க வீடியோ வெளியாகும் என்கிற மிரட்டல் கடிதம் வெளியாகி பகீரை கிளப்பியது. இதுதொடர்பாக கிச்சா சுதீப்பின் மேனேஜர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது தொடர்பான விசாரணையை போலீஸார் துவக்கி உள்ளனர்.
இந்நிலையில், அது குறித்து பேசிய கிச்சா சுதீப், தனக்கு அப்படியொரு மிரட்டலை விடுத்தது சினிமா துறையை சேர்ந்த நண்பர் ஒருவர் தான் என்றும் அவருக்கு எப்போது பதிலடி கொடுக்க வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்றும் பேசி உள்ளார்.

கிச்சா சுதீப்பின் இந்த திடீர் பாஜக ஆதரவு தென்னிந்தியாவில் பல முன்னணி பிரபலங்களுக்கு கஷ்டத்தை கொடுத்துள்ளது என்கின்றனர்.
Prakash Raj shocked and hurt after Kichcha Sudeep lends support to BJP: கிச்சா சுதீப் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் மனவேதனை அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











