ரொம்ப டாக்ஸிக்கா இருக்கு.. பிரபாஸ் படத்தில் இருந்து விலகினாரா பிரகாஷ் ராஜ்.. பரபரப்பு ட்வீட்!

ஹைதராபாத்: சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'ஸ்பிரிட்' படத்திலிருந்து நடிகர் பிரகாஷ் ராஜ் விலகியதாக வதந்திகள் பரவின. இயக்குநர் உடனான கருத்து வேறுபாடுகளும், கதைக்களம் மீதான அதிருப்தியும் காரணமென தகவல்கள் வெளியாகின. இந்த யூகங்களுக்கு பிரகாஷ் ராஜ் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடிகை தீபிகா படுகோனே விலகியதைத் தொடர்ந்து, பிரகாஷ் ராஜும் வெளியேறியதாகக் கூறப்பட்டது. படப்பிடிப்பின்போது திரைக்கதை, ஒரு காட்சியின் படமாக்கம் குறித்து அவர் திருப்தியற்ற நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. எனினும், இவை அனைத்தும் "ஆதாரமற்ற யூகங்கள்" என அவர் தற்போது வெளியிட்ட ட்வீட் மூலம் உறுதியாகி உள்ளது.

Prakash Raj shuts Fake News of he is exit from Sandeep Reddy Vanga s Spirit movie

அவர் கூறுகையில், "இவை ஆதாரமற்ற யூகங்கள்தான். எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது," என்றார். தான் இன்னும் 'ஸ்பிரிட்' திரைப்படத்தின் ஒரு பகுதியாகவே தொடர்வதையும் உறுதிப்படுத்தி, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பிரபாஸின் 'ஸ்பிரிட்': அனிமல் படத்தைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கி வரும் ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் ரெட்டி, 'கபீர் சிங்', 'அனிமல்' படங்களால் பிரபலமான வாங்காவும், பிரபாஸும் முதல்முறையாக இணைகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இதன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

தீபிகா படுகோன் வெளியேற்றம்: கடந்த ஆண்டு, நடிகை தீபிகா படுகோன் தனது மகள் துவாவுடன் அதிக நேரம் செலவிட, நீண்ட நேர வேலைக்கு மறுத்து 'ஸ்பிரிட்' படத்திலிருந்து விலகியிருந்தார். சம்பள உயர்வு, லாபத்தில் பங்கு, தெலுங்கில் வசனங்கள் பேசாதது போன்ற நிபந்தனைகள் படக்குழுவிற்கு திருப்தியளிக்கவில்லை எனக் கூறப்பட்டது.

தீபிகாவின் முடிவுகள் இயக்குநருக்கு உடன்பாடாக இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக திரிப்தி டிம்ரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தீபிகா படுகோன் படக்கதையை நிராகரித்தது குறித்து இயக்குநர் வாங்கா கடும் அதிருப்தி அடைந்திருந்தார்.

இது தொடர்பாக சந்தீப் ரெட்டி வாங்கா தனது எக்ஸ் தளத்தில் மறைமுகமாக ஒரு பதிவைப் பகிர்ந்தார்: "ஒரு நடிகரிடம் கதையை விவரிக்கும்போது, நான் 100% நம்பிக்கை வைக்கிறேன். எங்களுக்கிடையே கூறப்படாத NDA ஒப்பந்தம் உள்ளது. ஆனால், இதைச் செய்வதன் மூலம், நீங்கள் யார் என்பதை நீங்களே 'வெளிப்படுத்திவிட்டீர்கள்'. ஒரு இளம் நடிகரை இழிவுபடுத்தி, எனது கதையை நிராகரிக்கிறீர்களா? இதுதான் உங்கள் பெண்ணியத்தின் கோட்பாடா?" என்று விளாசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரகாஷ் ராஜ் ட்வீட்: இந்நிலையில், தீபிகா படுகோனை தொடர்ந்து பிரகாஷ் ராஜும் படத்தில் இருந்து விலகியதாக ரூமர்கள் பரவிய நிலையில், டாக்ஸிக் நிறைந்த உலகத்தில் பல ஃபேக் நியூஸ்கள் வைரலாகி வருகின்றன. நான் இன்னும் பிரபாஸ் படத்தில் நடிக்கவே தொடங்கவில்லை. அதற்குள் விலகி விட்டதாக வாட்ஸப் ஃபேக்டரிகள் கதையடிக்க ஆரம்பித்து விட்டன. கூடிய சீக்கிரமே சந்தீப் ரெட்டி வாங்கவுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எகிறும் எதிர்பார்ப்பு: பெரும் பட்ஜெட்டில் உருவாகும் 'ஸ்பிரிட்' 2027 மார்ச் 5 அன்று உலகளவில் வெளியாகும். தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ், சமூக வலைத்தளங்களில் ஒரு கருப்பு-வெள்ளை போஸ்டருடன், "நினைவில் கொள்ளுங்கள்... #Spirit உலக ரிலீசுக்குத் தயாராக உள்ளது," என அறிவிப்பை வெளியிட்டது.

திரிப்தி டிம்ரி பிரபாஸுடன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், நடிகர் விவேக் ஓபராயும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் பார்வை கடந்த டிசம்பரில் வெளியாகி மிகப்பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. கதைக்களம் மர்மமாக இருந்தாலும், தீவிரமான சண்டைக் காட்சிகளுடன் கூடிய ஆக்‌ஷன் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X