பாலிவுட் சினிமாக்களை விளாசிய பிரகாஷ் ராஜ்.. மனுஷன் இந்த அடி அடிச்சிருக்காரே ப்பா!

திருவனந்தபுரம்: இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரகாஷ் ராஜ். வில்லன் ரோல், கேரக்டர் ரோல் என எதுவாக இருந்தாலும் புகுந்து விளையாடக்கூடிய அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போதும் பிஸியாக நடித்துவரும் அவர் கேரளாவில் நடக்கும் கேரள இலக்கிய திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் தென்னிந்திய மற்றும் பாலிவுட் சினிமாக்கள் பற்றி பேசியிருக்கும் விஷயம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கே.பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர் பிரகாஷ் ராஜ். கே.பி அறிமுகம் செய்தாலே அந்த கலைஞர் மிகச்சிறந்த திறமையை கொண்டிருப்பார் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்தார் பிரகாஷ் ராஜ். முதல் படத்தின் வெற்றி அவருக்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றுக்கொடுத்தன. அவரும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடிப்பை வழங்கினார்.

தமிழில் டாப்: தென்னிந்திய மொழிகளில் பலவற்றில் அவர் நடித்தாலும் தமிழ் சினிமாதான் அவரை டாப்பில் கொண்டு போய் வைத்தது. ஆசை, இருவர், அப்பு, கில்லி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், அறிந்தும் அறியாமலும், பீமா, மொழி, வெள்ளித்திரை என அவர் தமிழில் நடித்த படங்களின் லிஸ்ட் நீளமானது. குறிப்பாக கில்லியில் அவர் திரிஷாவை செல்லம் என அழைத்ததிலிருந்து தமிழ்நாட்டு ரசிகர்களின் செல்லமாக அவர் மாறினார். இருவர், காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார்.

Prakash Raj Slams Bollywood for Losing Its Roots Praises Tamil and Malayalam Cinema
Photo Credit:

விட்டு விளாசும் பிரகாஷ் ராஜ்: இது ஒருபக்கம் இருக்க வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார் அவர். முக்கியமாக தனது தோழியான பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து கொந்தளிப்பின் உச்சத்துக்கு என்ற அவர்; பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். மேலும் மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் தோல்வியே கிடைத்தது. இந்நிலையில் கேரள இலக்கிய திருவிழாவில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் சினிமா பற்றி பேசியிருக்கும் விஷயம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

பிரகாஷ் ராஜ் பேச்சு: அந்த விழாவில் அவர் பேசுகையில், "இப்போதைய சூழலில் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா மிகவும் வலுவான ஆழமான படஙக்ளை தயாரிப்பதாக நான் உணர்கிறேன். மறுபுறம் இந்தி சினிமாவோ அதன் வேர்களை இழந்துவிட்டது. அதில் அனைத்துமே பிளாஸ்டிக் தன்மையுடன் இருக்கின்றன. அப்படியே Madame Tussauds Museuml பார்ப்பது போன்றுதான் இருக்கிறது. சொல்வதற்கு நம்மிடம் இன்னும் கதைகள் இருக்கின்றன. தமிழின் இளம் இயக்குநர்கள் தலித் பிரச்னைகளை பற்றி திரைப்படங்களில் பேசுவது நம்பிக்கையை தருகிறது.

அப்படி மாறிவிட்டன: மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் எல்லாம் வந்த பிறகு மும்பை திரைப்பட துறை அதற்காக மட்டுமே படங்களை உருவாக்க தொடங்கிவிட்டன. அவை Page 3 கலாசாரத்துக்குள்ளும் சென்றுவிட்டன. அதன் காரணமாக ராஜஸ்தான், பீகார் போன்ற பகுதிகளுடனான தொடர்பையும் இழந்துவிட்டன. இன்று எல்லாவற்றிலும் பணம்தான் முதன்மையாக இருக்கிறது. ரீல்ஸ், பேஜ் 3 கவரேஜ், ஓவர் சுய விளம்பரம் போன்றவற்றால் அந்தத் துறை ரசிகர்களுடனான தொடர்பையும் இழந்துவிட்டதாகவே உணர்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X