Prakash Raj: ஒரே ஒரு வார்த்தை தான்.. இந்தியளவில் டிரெண்டான பிரகாஷ்ராஜ்.. என்ன சொன்னார் தெரியுமா?
பெங்களூரு: கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காலையிலேயே தனது வாக்கினை செலுத்திய நடிகர் பிரகாஷ்ராஜ் மீடியாவுக்கு அளித்த பேட்டியில் சொன்ன வார்த்தையால் #PrakashRaj ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
தொடர்ந்து பாஜகவினருக்கு எதிரான கருத்துக்களை சொல்லி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது வாக்கினை செலுத்திய நிலையில், மதவாத கட்சிக்கு ஆதரவாக உங்கள் ஓட்டுக்களை போட வேண்டாம் என வாக்காளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வரும் நிலையில், #PrakashRaj ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

ஜஸ்ட் ஆஸ்கிங் பிரகாஷ்ராஜ்: ஜஸ்ட் ஆஸ்கிங் ஹாஷ்டேக் மூலமாக பாஜகவுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் ஏகப்பட்ட கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வந்த நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், தனது வாக்கினை செலுத்தி விட்டு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் சொன்ன வார்த்தைகள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

40 சதவீதம் ஊழல்வாதிகளுக்கு எதிராக: நடிகர் பிரகாஷ்ராஜ் தனது வாக்கினை செலுத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த நிலையில், மதவாத கட்சிக்கு எதிராகவும் 40 சதவீத ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் நான் எனது வாக்கினை செலுத்தி விட்டு வந்திருக்கிறேன்.
நீங்களும் உங்கள் வாக்குகளை நேர்மையானவர்களுக்கு சிந்தித்து செலுத்துங்கள் என பாஜகவுக்கு எதிரான தனது பிரச்சாரத்தை வாக்கு செலுத்திய பின்னர் கூறிய நிலையில், #PrakashRaj டிரெண்டாகி வருகிறது.

எதிர்ப்பும் ஆதரவும்: பிரகாஷ்ராஜின் கருத்தை வரவேற்று அவரது ரசிகர்கள் அவரது பேச்சை டிரெண்ட் செய்து வரும் நிலையில், அவருக்கு எதிரான கருத்துக்களும் சமூக வலைதளத்தில் அதிகரித்துள்ளன.
முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என பிரகாஷ் சொன்ன பழைய பேட்டி வீடியோவை பாஜக ஆதரவாளர்கள் டிரெண்ட் செய்து வரும் நிலையில், பிரகாஷ் ராஜ் சிலுவையை சுமந்துக் கொண்டு செல்வது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு பிரகாஷ் ராஜும் ஒரு மதவாதி தான் என ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











