12 ஆண்டுகளுக்குப் பின்... மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்!

சென்னை: மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

கடல் படத்திற்குப் பிறகு தற்போது தனது புதிய பட வேலைகளில் பிசியாகி விட்டார் இயக்குநர் மணிரத்னம். முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்ட இப்படத்தில் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.

சூப்பர்... சூப்பர்

சூப்பர்... சூப்பர்

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். அதில், அவர், ‘சூப்பர், சூப்பர், மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். எனது கேரக்டரும் , கதையையும் மணிரத்னம் எனக்கு விளக்கினார். சியர்ஸ்!'' என தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில்...

மணிரத்னம் இயக்கத்தில்...

முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் இருவர், பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் நடித்துள்ளார் பிரகாஷ்ராஷ்.

மீண்டும் பி.சி.ஸ்ரீராம்...

மீண்டும் பி.சி.ஸ்ரீராம்...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அலைபாயுதே படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து பி.சி.ஸ்ரீராம் மணிரத்னத்துடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு...

படப்பிடிப்பு...

பி.சி.ஸ்ரீராமின், ‘பயணம் துவங்கி விட்டது' என்ற சமூக வலைதளத் தகவல் மூலம் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விட்டதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X