குழந்தையை வைத்துக்கொண்டே லிப் கிஸ்ஸா?.. என்ன செல்லம் இது?.. பிரகாஷ் ராஜை விமர்சிக்கும் ரசிகர்கள்

சென்னை: பிரகாஷ் ராஜ் இந்திய அளவில் பிரபலமான நடிகர். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து பாலசந்தரின் கண்களில் பட்டு சினிமாவுக்குள் நுழைந்தவர். தனது ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் வேரியேஷன் காண்பிக்கும் மிகச்சில சிறந்த நடிகர்களில் பிரகாஷ் ராஜும் ஒருவர். அவர் கடைசியாக அவர் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் சில வருடங்களுக்கு முன்பு பகிர்ந்திருந்த புகைப்படம் ஒன்று திடீரென ட்ரெண்டாகி அவருக்கு விமர்சனத்தை பெற்று தந்திருக்கிறது. அதேசமயம் பலர் ஆதரவும் கொடுத்துவருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துவருபவர் பிரகாஷ் ராஜ். வில்லன் கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில் தனது முத்திரையை அவர் பதித்துவிடுவார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ் ராஜ் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கினார். கே.பாலசந்தர் ஒரு விழாவிற்கு சென்றிருந்தபோது பிரகாஷ் ராஜின் நடிப்பைப் பார்த்து ஈர்க்கப்பட்டார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் தான் இயக்கிய டூயட் படத்தின் பிரகாஷ் ராஜை அறிமுகப்படுத்தினார் கே.பாலசந்தர்.

Prakash Raj s wedding anniversary photos have suddenly trended

அடுத்தடுத்த வாய்ப்புகள்: முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் திறமையை நிரூபித்த பிரகாஷ் ராஜுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக வசந்த் இயக்கிய ஆசை படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேபோல் அப்பு படத்தில் திருநங்கையாக நடித்து நடிப்பில் அசுர பாய்ச்சல் செய்திருப்பார். அதனையடுத்து பல படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் பல மொழிகளில் தடம் பதித்தார்.

செல்லத்தை பிராண்டாக்கிய பிரகாஷ் ராஜ்: கில்லி படம் விஜய்யின் கேரியரில் முக்கியமான படம். அப்படத்தில் விஜய் செய்த ஆக்‌ஷன்களைவிட ஒரு படி அதிகம் பேசப்பட்டது பிரகாஷ் ராஜின் டயலாக் டெலிவிரியும், அவரது நடிப்பும்தான். குறிப்பாக த்ரிஷாவை அவர் செல்லம் என்று அழைத்தது இன்றுவரை ரசிக்கப்படுகிறது. மேலும் தனது மனதுக்கு பட்டதை வெளிப்படையாக பேசுபவரும் பிரகாஷ் ராஜ். குறிப்பாக பாஜக அரசுக்கு எதிராக போல்டாக பல கருத்துக்களை பேசிவருகிறார்.

திருமணம்: இப்போதும் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் பல படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே அவர் 1994ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்தார்கள். அவர்களில் மகன் சித்து உயிரிழந்துவிட்டார். சூழல் இப்படி இருக்க கடந்த 2009ஆம் ஆண்டு லலிதா குமாரியை விவாகரத்து செய்து பிரிந்தார் பிரகாஷ் ராஜ். பிறகு நடன அமைப்பாளர் போனி வர்மாவை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார்.

Prakash Raj s wedding anniversary photos have suddenly trended

திடீர் ட்ரெண்ட் ஃபோட்டோ: இந்நிலையில் பிரகாஷ் கடந்த 2021ஆம் ஆண்டு தனது 11ஆவது திருமண நாளை (போனி வர்மாவுடனான திருமணம்) தனது மகள்கள் மற்றும் மகன் வேதாந்த் முன்னிலையில் போனி வர்மாவுடன் கொண்டாடினார். அந்தப் புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரவும் செய்திருந்தார். அந்தப் புகைப்படங்கள் இப்போது திடீரென ட்ரெண்டாகியுள்ளன்.

ட்ரெண்ட் மட்டுமில்லை: அந்த ஃபோட்டோக்கள் ட்ரெண்டானது மட்டுமின்றி அவருக்கு எதிராக சிலரின் விமர்சனத்தையும் பெற்று தந்திருக்கிறது. அதாவது ஒரு புகைப்படத்தில் தனது மகன் வேதாந்த்தை வைத்துக்கொண்டு தன் மனைவி போனி வர்மாவுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கிறார். அதனைப் பார்த்த சிலர், பெற்ற மகனை முன்னாடி வைத்துக்கொண்டு இப்படியா நடந்துகொள்வது என்று விமர்சனத்தை சமூக வலைதளங்களில் வைக்கின்றனர். அதேசமயம், அவருடைய மனைவிக்கு அவர் முத்தம் கொடுக்கிறார். இதில் என்ன குறையை கண்டீர்கள் என்று விமர்சனம் வைப்பவர்களுக்கு பெரும்பாலானோர் தக்க பதிலடியை கொடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X