கணவருடன் நடிகை கள்ளத் தொடர்பு.. நடுரோட்டில் காரை நிறுத்தி புரட்டி எடுத்த மனைவி.. டிரெண்டாகும் வீடியோ

சென்னை: நடிகை பிரக்ருதி மிஷ்ராவும் நடிகர் பாபுஷான் மோஹன்டியும் காரில் கிஸ் அடித்துக் கொண்டே சென்றதாகவும், அதைப் பார்த்து அந்த காரை வழிமறித்த பாபுஷானின் மனைவியும் சக நடிகையுமான த்ரிபாதி சத்பாதி மனைவியையும் அவரது கணவரையும் ஓட ஓட விட்டு அடித்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக கிளம்பிய நிலையில், இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும், நடிகரின் மனைவி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகையின் தலை முடியை எல்லாம் பிடித்து இழுத்து நடிகரின் மனைவி அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

நடிகையுடன் தொடர்பு

நடிகையுடன் தொடர்பு

ஒடிசா நடிகை பிரக்ருதி மிஷ்ரா மற்றும் நடிகர் பாபுஷான் மோஹன்டி இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக நீண்ட நாட்களாக சந்தேகப்பட்டு வந்த பாபுஷான் மோஹன்டியின் மனைவியும் துணை நடிகையுமான த்ரிபாதி சத்பாதி தனது கணவர் காரை தனது அண்ணன் உடன் சேர்ந்து ஃபாலோ செய்துள்ளார். நடிகை பிரக்ருதி மிஷ்ராவுடன் காரில் சென்றுக் கொண்டிருக்கும் போதே சில லீலைகளை அவர் செய்ததை பார்த்து மனைவி ஆத்திரம் அடைந்ததாக கூறுகின்றனர்.

நடிகையின் தலைமுடியை பிடித்து அடி

தாங்கள் சென்ற வண்டியை குறுக்கே விட்டு, கணவர் சென்ற காரை நிறுத்திய நிலையில், தனது அண்ணனை வைத்து கணவரை மடக்கி விட்டு, நடிகையின் தலைமுடியை பிடித்து வெளுத்து விட்டு இருக்கிறார் த்ரிபாதி. காரில் சண்டைப் போட்டுக் கொள்வதை பார்த்த இளைஞர்கள், அந்த காரில் நடிகை இருப்பதை அறிந்ததும் அதனை வீடியோவாக எடுத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

கணவரையும் விடல

நடிகையை மட்டுமின்றி தனது கணவரையும் வெளுத்து வாங்கி இருக்கிறார் த்ரிபாதி. அங்கு கூடிய இளைஞர்கள் ஒடிசா நடிகை பிரக்ருதி மிஷ்ராவை அடையாளம் கண்டு கொண்ட நிலையில், அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக நடிகை அருகே சென்று செல்ஃபி எடுக்க முயற்சித்தது தான் இதில், ஹைலைட்டே, ஆள விடுங்கடா சாமி என நடிகை கை எடுத்துக் கும்பிட்டு, ஒரு ஆட்டோவில் ஏறி அந்த இடத்தில் இருந்து கிளம்பிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

புவனேஷ்வர் கமீஷ்னரிடன் நடிகை பிரக்ருதியின் அம்மா புகார் அளித்துள்ளார். பாபுஷான் மோஹன்டியின் மனைவி சில அடியாட்களுடன் வந்து காரை வழிமறித்து தனது மகளையும் நடிகர் பாபுஷானையும் தாக்கி உள்ளார் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். 341, 294, 323, மற்றும் 506 பிரிவுகளின் கீழ் த்ரிபாதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X