மகேந்திரன்- இளையராஜா இணையும் படத்தைத் தயாரிக்கிறார் பிரகாஷ் ராஜ்!
சென்னை: இளையராஜா - மகேந்திரன் இணையும் புதிய படத்தை, நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டூயட் மூவீஸ் மூலம் தயாரிக்கிறார்.
சில தினங்களுக்கு முன் இயக்குநர் மகேந்திரனும் இளையராஜாவும் இணையும் புதுப் படத்துக்கான அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து இருவரும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்து படம் குறித்துப் பேசினர்.

இந்தப் படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை விரும்பி ஏற்றுள்ளார் இயக்குநரும் நடிகருமான பிரகாஷ்ராஜ்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் அறிவிப்பும் வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ். அதில், "மேஸ்ட்ரோ இளையராஜா - இயக்குநர் மகேந்திரன் இணையும் புதிய படத்தை நான் தயாரிக்கிறேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் முழு விவரத்தையும் அறிவிக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications