வளரவே இல்லை, அதற்குள் அஜீத் மாதிரி செய்வதா?: வாரிசு நடிகரை விமர்சிக்கும் திரையுலகம்

By Siva

Recommended Video

அஜித் ரேஞ்சுக்கு உதார் விடும் வாரிசு நடிகர்...வீடியோ

திருவனந்தபுரம்: மோகன்லாலின் மகன் பிரனவ் செய்துள்ள காரியத்தை பற்றி தான் மலையாள திரையுலகில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரனவ் கேமராவுக்கு பின்னால் இருக்க ஆசைப்பட்டார். கமல் ஹாஸனின் பாபநாசம், லைப் ஆஃப் ஜோசுட்டி ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் ஆதி படம் மூலம் ஹீரோவாகியுள்ளார். ஆதி படத்தை பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இயக்கியுள்ளார்.

ரிலீஸ்

ரிலீஸ்

பிரனவ் மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள ஆதி படம் நாளை ரிலீஸாகிறது. ஆனால் பிரனவோ பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்துள்ளார்.

பேட்டி

பேட்டி

படம் குறித்து பேட்டி எதுவும் கொடுக்க மாட்டேன். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அவர் கறாராக தெரிவித்துவிட்டார்.

பயணம்

பயணம்

ஆதி படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் பிரனவ் இமய மலைக்கு கிளம்பிச் சென்றுவிட்டார். பயணம் செய்வது என்றால் பிரனவுக்கு மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி

வளர்ச்சி

தல அஜீத் மாதிரி பட விளம்பரத்திற்கு வர மாட்டேன், பேட்டி கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாரே பிரனவ் என்று மலையாள திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.

கூச்சம்

கூச்சம்

பிரனவ் இயற்கையாகவே கூச்ச சுபாவம் உள்ளவர். முதல் படம் என்பதால் எதையாவது பேசி படத்திற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தால் கூட அவர் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X