உள்ளத்தில் நல்ல உள்ளம்.. ஒன்றல்ல, இரண்டல்ல 75 ஆயிரம் உணவுகள்.. நடிகை பிரணிதா தாராளம்!

உள்ளத்தில் நல்ல உள்ளம்.. ஒன்றல்ல, இரண்டல்ல 75 ஆயிரம் உணவுகள்.. நடிகை பிரணிதா தாராளம்!

ஹைதராபாத்: கொரோனா பாதிப்பால் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நடிகை பிரணிதா 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கி உள்ளார்.

Recommended Video

சகுனி நடிகை Pranitha செய்யும் சேவை | Pranitha Foundation

பெங்களூரை சேர்ந்த பிரணிதா 2010ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பொருக்கி எனும் படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த பிரணிதா தமிழில் கார்த்தியின் சகுனி படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

சூர்யா, கார்த்தி

சூர்யா, கார்த்தி

ஷங்கர் தயாள் இயக்கத்தில் 2012ம் ஆண்டு கார்த்தி, சந்தானம் நடிப்பில் வெளியான சகுனி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த பிரணிதா, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் மனைவியாக நடித்திருப்பார்.

பிளாக்பஸ்டர்

பிளாக்பஸ்டர்

தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தாரண்டிகி தாரேதி படத்தில் நாயகியாக சமந்தா நடித்திருப்பார். மாமா பெண் கதாபாத்திரத்தில் நடிகை பிரணிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அந்த படத்தை கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வந்தா ராஜாவா வருவேன் என்ற படமாக சுந்தர்.சி இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமும் உணவு

தினமும் உணவு

ஆனால், கொரோனா தாக்கம் அவர் நினைப்பது போல, இந்தியர்களை அவ்வளவு லேசாக விட்டு விடவில்லை. கொரோனாவின் பாதிப்பு அதிகரித்த நிலையில், லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. கடந்த 21 நாட்களாக தினமும் பசியால் வாடும் பல்லாயிரக் கணக்கான நபர்களுக்கு உணவு சமைத்து, வழங்கி வருகிறார் பிரணிதா.

75000 உணவு பொட்டலங்கள்

75000 உணவு பொட்டலங்கள்

ஒர்க்கவுட் செய்வது, கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவது என இந்த லாக்டவுன் நேரத்தில் பொழுது போகாமல் பல ஹீரோயின்கள் பெட்ரூமிலே கிடக்கும் நிலையில், சில ஹீரோயின்கள் முன்வந்து கொரோனா உதவிகளை செய்து வருகின்றனர். அதிலும், நடிகை பிரணிதா இதுவரை 75 ஆயிரம் பேருக்கு உணவு அளித்திருப்பது என்பது அவரது நல்ல உள்ளத்தையே காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X