இங்க இல்லைனா என்ன... இந்தி இருக்குல்ல... ஹீரோயின் ஹேப்பி

By

சென்னை: நடிகை பிரணிதா, பிரியதர்ஷன் இயக்கும் இந்தி படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்கிறார்.

அருள்நிதியின் உதயன், கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாசு, ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகள் உட்பட சில படங்களில் நடித்தவர் பிரணிதா. கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழ் அதிக வாய்ப்புகள் இல்லாததால் இவர் இந்தியில் இப்போது கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். இவர், 1971-ல் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போரை மையப்படுத்தி உருவாகும் புஜ்: த பிரைட் ஆப் இந்தியா என்ற இந்திப் படத்தில் இவர் நடித்துவருகிறார்.

விமானப்படை வீரர்

விமானப்படை வீரர்

குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள, புஜ் விமான நிலையத்துக்கு பொறுப்பாளராக இருந்த, விமானப்படை வீரர் விஜய் கர்னிக் என்பவரின் வாழ்க்கைக் கதையை சொல்லும் இந்தப் படத்தை அபிஷேக் துதையா இயக்குகிறார்.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

இதில் விஜய் கர்னிக்காக அஜய் தேவ்கன் நடிக்கிறார். மற்றும் சஞ்சய் தத், சோனாக்‌ஷி சின்ஹா, ராணா ஆகியோருடன் பிரணிதாவும் நடிக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.

ஹங்கம்மா

ஹங்கம்மா

இந்நிலையில் மேலும் ஒரு இந்தி படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் பிரணிதா. அக்‌ஷய் கண்ணா, பரேஷ் ராவல், ரிமி சென் உட்பட பலர் நடித்து 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தி படம், ஹங்கம்மா. காமெடி படமான இதை பிரியதர்ஷன் இயக்கி இருந்தார். திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். இது, பூச்சாக்கொரு மூக்குத்தி என்ற மலையாள படத்தின் ரீமேக்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

இப்போது ஹங்கம்மா படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. பிரியதர்ஷன் இயக்கும் இந்த காமெடி படத்தில் பரேஷ் ராவல், ஷில்பா ஷெட்டி, மீஸான் ஜாஃபரி ஆகியோருடன் பிரணிதாவும் நடிக்கிறார்.

முழு நீள காமெடி

முழு நீள காமெடி

'இது முழு நீள காமெடி படம். வழக்கமாக ஹீரோவுக்கு ஜோடியாக, அழகாக வந்து செல்வது போலதான் நடித்திருக்கிறேன். இது வேறு ஸ்டைல் படம். இதற்கு முன் இப்படியொரு முழு நீள காமெடி படத்தில் நடித்ததில்லை. இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப கதை உருவாக்கப் பட்டிருக்கிறது.

பிரியதர்ஷன் டீம்

பிரியதர்ஷன் டீம்

என் முதல் இந்தி படத்தில் அனுபவம் வாய்ந்த அஜய் தேவ்கனுன் நடித்தேன். இப்போது இதில் இளம் ஹீரோ மீஸானுடன் நடிக்கிறேன். சமீபத்தில் நடந்த போட்டோ ஷூட்டில் கலந்துகொண்டேன். பிரியதர்ஷன் மற்றும் அவர் டீமுடன் பணியாற்றுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் பிரணிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X