»   »  சரத்குமாரின் 'அந்த' மகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி, தாக்கிய தாய்மாமன்

சரத்குமாரின் 'அந்த' மகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி, தாக்கிய தாய்மாமன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: துப்பாக்கியை காட்டி நடிகை பிரனிதா ஜோஸ் மற்றும் அவரது தாயை மிரட்டியவரை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் ஜோஸின் மகள் நடிகை பிரனிதா. மலையாளம், தமிழ், கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். சரத் குமார் ஜோடியாகவும், மகளாகவும் கம்பீரம் படத்தில் நடித்தவர் பிரனிதா.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

தாத்தா

தாத்தா

திங்கட்கிழமை மாலை பிரனிதா தனது தாய் ரத்னபிரபாவுடன் தாத்தா ரத்னாகரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ரத்னபிரபாவின் சகோதரர் அரவிந்த் ரத்னாகர்(38) அங்கு வந்துள்ளார்.

துப்பாக்கி

துப்பாக்கி

ரத்னபிரபாவின் சகோதரர் பிரனிதா மற்றும் அவரின் தாயை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் அவர்களை தாக்கியும் உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பயந்துவிட்டனர்.

போலீஸ்

போலீஸ்

இந்த சம்பவத்தை அடுத்து பிரனிதா தனது தாய் மாமா மீது போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர்.

சொத்து

சொத்து

சொத்து பிரச்சனை தொடர்பாகவே அரவிந்த் பிரனிதா மற்றும் அவரின் தாயை மிரட்டியதாக கூறப்படுகிறது. தங்களின் உயிருக்கு பயந்தே போலீசுக்கு சென்றதாக பிரனிதா தெரிவித்துள்ளார்.

English summary
Kerala police arrested Arvind Ratnakar, maternal uncle of actress Pranitha for threatening her and her mother.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil