»   »  மாமா லிங்க்: 5 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்

மாமா லிங்க்: 5 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

கன்னட பிரசாத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஜந்து காவல்துறை அதிகாரிகள் சென்னையை விட்டு தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரின் தலையும் உருளும் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து கொண்டு தென்னிந்தியா முழுவதும் விபச்சாரத் தொழிலை நடத்தி அமோகமாக இருந்து வந்தவர் கன்னட பிரசாத் அவரது விபச்சார அழகிகள் பட்டியலில் கிட்டத்தட்ட அத்தனை முன்னணி இளம் நடிகைகளும், அந்தக் கால முன்னணி நடிகைகளும் தான் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர்.

நடிகைகளை வைத்து படு பிரமாதமாக விபச்சாரத்தை நடத்தி வந்தார் பிரசாத். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என சகலருக்கும் பிரசாத்தான் பாசமுள்ள மாமாவாக இருந்து பெண் கொடுத்து கவனித்துள்ளார்.

காவல்துறையில் பல அதிகாரிகளை மடக்கி தனது பிடியில் வைத்துக் கொண்டு அந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இவர்களில் ஒருவர் பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணையில் முடிவில் பிரசாத்துடன் தொடர்பு வைத்திருந்து உறுதிப்படுத்தப்பட்ட ஜந்து அதிகாரிகள் சென்னையை விட்டே தூக்கி அடிக்கப்பட்டுள்ளனராம்.

இவர்களில் ஒருவர் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் டிஎஸ்பியாக இருந்தவர். இன்னொருவர் சென்னை நகர சைபர் கிரைம் பிரிவில் டிஎஸ்பியாக இருந்தவர். டிஜிபி உத்தரவின் பேரில் இந்த ஜந்து பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஜந்து பேர் தவிர மூன்று உதவி ஆணையர்கள், ஒரு இன்ஸ்பெக்டரும் சிக்கியுள்ளனர். விரைவில் இவர்களும் இடமாற்றம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடமாற்றத்தோடு நில்லாமல், துறை ரீதியான நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்படவுள்ளதாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil