ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா தனுஷ், பிரசன்னா
Recommended Video

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஐஸ்வர்யா தனுஷ், நடிகர் பிரசன்னா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைஷ்ணவதளங்களில் ஒன்றாகும். தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் இராஜகோபுரம் உள்ள கோவில் அது. அந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் வந்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் நடிகர் பிரசன்னா ஆண்டாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்தனர்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா உள்ளிட்டோர் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் குற்றாலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கிற்கு தனுஷுடன் வந்த ஐஸ்வர்யாவும், சினேகாவுடன் வந்த பிரசன்னாவும் கோவிலுக்கு சென்று வந்தனர்.
13 ஆண்டுகள் கழித்து சினேகாவும், தனுஷும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











