பாலாஜி மோகன் மற்றும் ட்ரெண்ட் லவுடு இணைந்து ... பிரசன்னா,தன்யா நடிக்கும் புதிய வெப் சீரிஸ்
சென்னை: Trend Loud India Digital மற்றும் இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன.
இந்த புதிய தமிழ் இணைய தொடர் பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார்.
அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

பிப்ரவரி 2022
சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. எழுத்து & இயக்கம் விக்னேஷ் விஜயகுமார் மேற்கொள்ள
கிரியேட்டிவ் புரடியூசராக பாலாஜிமோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி இத்தொடரை தயாரிக்கிறார்.
சஞ்சய் சுபாஷ் மற்றும் வித்யா சுகுமாரன் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

பரத் சங்கர் இசையில்
இந்த குழுவில் முக்கியமாக இணைந்து உள்ள டெக்னீசியன்ஸ் , ஒளிப்பதிவு சிவா grn , இசை பரத் சங்கர்,
படத்தொகுப்பு - ஜூலியன், கலை இயக்குநர் ஶ்ரீராமன் E, காஸ்ட்யூம் டிசைனர் திப்தி தேசாய்,பப்ளிசிடி டிசைன் சிவகுமார் S,எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்- விக்டர் பிரபாகரன்.M,கிரியேட்டிவ் புரடக்ஷன் குழு -நிவேதா பாஸ்கரன், தன்யா பாலகிருஷ்ணா, புரடக்ஷன் மேனேஜர் MV ரமேஷ், மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா.

தனித்துவமாக
நடிகர் பிரசன்னா வித்தியாசமான திரைக்கதையை தேர்ந்தெடுத்து கதைக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்கள் செய்து தனித்துவமாக தன் நடிப்பை வெளிப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக உள்ளார். இந்தப் படத்தில் அவர் செய்ய இருக்கும் கதாபாத்திரம் வழக்கத்திற்கு மாறாக கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்விக்கும் என்று மிகவும் நம்புகிறார்.

பல சாதனைகளை படைத்து
தன்யா பாலகிருஷ்ணன் ஒவ்வொரு முறையும் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து தனக்கு உண்டான முத்திரையைப் பதித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கார்பன் திரைப்படம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். அதேபோல் இந்தப் படத்திலும் தனக்கு வெரைட்டியான ரோல் இருப்பதாகவும் மக்களை மிகவும் ஈர்க்கும் என்று தனது நண்பர்களிடம் கூறிவருகிறார். ட்ரெண்ட் லவுடு பல புதுமுக இயக்குனர்களையும் வித்தியாசமான திறமைசாலிகளையும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்தக் குழுவும் நிறைய வெற்றியை தேடித் தருவார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் 2022 இந்த படம் பற்றிய மற்ற புதிய அப்டேட்ஸ் விரைவில் வரும் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











