சினேகா குறித்து யாரும் அவதூறாகப் பேசவில்லை - பிரசன்னா

By Shankar

சென்னை: நடிகை சிநேகா பற்றி இணையதளத்தில் யாரும் அவதூறு பரப்பவில்லை. அதுபற்றி நாங்கள் புகார் தருவதாக யாரிடமும் கூறவும் இல்லை, என்று நடிகரும் சிநேகாவின் கணவருமான பிரசன்னா மறுப்பு தெரிவித்துள்ளார்.

சினேகா குறித்த சலசலப்பு ஏற்பட்ட நிலையில் இந்த மறுப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அதேசமயம், சினேகா குறித்த செய்திக்கு பிரசன்னா மறுப்பு தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தபோதும், தான் அப்படி செய்யவில்லை என்றும் பிரசன்னா கூறியுள்ளார்.

பேஸ்புக்கில்

பேஸ்புக்கில்

சில தினங்களுக்கு முன் பேஸ்புக்கில் நடிகை சிநேகா மற்றும் சமீபத்தில் பதவி இழந்த முன்னாள் அமைச்சரை இணைத்து ஒருவர் நேரடியாகவே எழுதியிருந்ததாக பரபரப்பு கிளம்பியது.

உடனே மறுத்த பிரசன்னா

உடனே மறுத்த பிரசன்னா

இதனை மறுத்து உடனே சம்பந்தப்பட்ட பதிவில் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார் பிரசன்னா. ஆனால் தான் உண்மையை எழுதியிருப்பதாக சம்பந்தப்பட்ட பதிவர் பதில் கூறியிருந்தார்.

கமிஷனர் ஆபீஸ் போகவிருந்த சிநேகா

கமிஷனர் ஆபீஸ் போகவிருந்த சிநேகா

இந்த நிலையில், சிநேகாவே கமிஷனர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பேஸ்புக் பதிவர் மீது புகார் தருவதாக தகவல் பரவியது.

காத்திருந்த நிருபர்கள்- போலீஸார்

காத்திருந்த நிருபர்கள்- போலீஸார்

உடனே ஏராளமான நிருபர்கள் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்தனர். கொட்டும் மழையிலும் பல பேஸ்புக் பயனாளர்களும் அங்கே வந்திருந்தனர்.

சுவாரஸ்ய எதிர்பார்ப்பு

சுவாரஸ்ய எதிர்பார்ப்பு

போலீசாருக்கு அதிகாரப்பூர்வமாக இதுபற்றி எந்தத் தகவலும் வராவிட்டாலும், செய்தியாளர்கள் குவிந்ததைப் பார்த்து ஒருவித சுவாரஸ்ய எதிர்ப்பார்ப்புடன் சிநேகா வருகைக்கு காத்திருந்தனர்.

வரவில்லை சிநேகா

வரவில்லை சிநேகா

ஆனால் சிநேகா வரவே இல்லை. இடையில் சிநேகா தொடர்பான பதிவுகளை நீக்கிவிட்டதாக சம்பந்தப்பட்ட பயனாளர் தெரிவித்திருந்தார்.

உண்மையா பிரசன்னா...

உண்மையா பிரசன்னா...

இந்த நிலையில் பிரசன்னாவைத் தொடர்பு கொண்டு, கமிஷனர் அலுவலகத்தில் புகார் தர வருவது உண்மையா என்று கேட்டோம்.

அப்படியா...

அப்படியா...

அதற்கு அவர், "அப்படியா... நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும். சிநேகா பற்றி எந்த விதமான அவதூறு தகவலும் இணையத்தில் பரவவே இல்லை. இதில் நான் எப்படி புகார் தர முடியும். யாரோ வேண்டுமேன்றே இதனை கிளப்பி விட்டுள்ளார்கள்", என்றார்.அந்தப் பதிவில் நீங்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுதியிருந்தீர்களே, என்றோம்.

பேஸ்புக் பக்கமே போயே நாளாச்சு

பேஸ்புக் பக்கமே போயே நாளாச்சு

"நான் பேஸ்புக் பக்கம் போயே நாளாகிவிட்டது. நான் யாருடைய பதிவையும் பார்க்கவில்லை", என்று போட்டார் ஒரே போடாக!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X